கடையநல்லூர் மாவடிக்கால் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவா. இவர் இந்து முன்னணியின் நெல்லை மாவட்ட செயலாளராக உள்ளார். பாபர் மசூதி இடித்த இடத்தில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என வலியுறுத்தி இவரது தலைமையில் கடந்த மாதம் கடையநல்லூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதையடுத்து அவருக்கு போனில் மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர். அதைத்தொடர்ந்து அவருக்கு 2 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் அவரை கொல்லப்போவதாக கடையநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு மர்ம போன் வந்தது.

இதனால் சிவாவுக்கு தற்போது கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

News Courtesy : Kadayanallur Seithigal

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment