• சருமத்திற்கு ஈரப்பதமும், பளபளப்பும் கிடைக்க சில்லென்ற கிரீன் டீயை முகத்தில் தடவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அழுக்கு போவதுடன், சருமத்திற்கு தேவையான பளப்பளப்பையும் கொடுக்கும்.
• கண்களுக்கு கீழ் வீக்கம் மற்றும் கருவளையம் இருப்பின் அதை இந்த கிரீன் டீ மூலம் சரிசெய்யலாம். வீட்டில் டீ பையை தூக்கி எரிய வேண்டாம். அதை அப்படியே கண்களுக்கு கீழ் தினமும் வைத்து வந்தால் படிப்படியாக கருவளையம் நீங்கிவிடும். ஏனெனில் டீயில் உள்ள காப்ஃபைன், கண்களுக்கு கீழ் உள்ள வீக்கத்தையும், கருவளையத்தையும் போக்கி விடும்.
• கூந்தலின் தன்மையை பாதுகாக்க ப்ளாக் டீ அல்லது கிரீன் டீயை கொண்டு கூந்தலை அலச வேண்டும். இதனால் கூந்தலின் தன்மை மிருதுவாகவும், சுத்தமாகவும் மாறும். அதிலும் ஷாம்பு போட்டு குளித்தவுடன், இந்த முறையை செய்து வந்தால் கூந்தலுக்கு கண்டிஷன் செய்தது போல் பளபளப்பாக இருக்கும்.
• சிலருக்கு காலில் இருந்து வரும் ஒரு வித நாற்றம் உங்கள் நம்பிக்கையை கெடுத்து விடும். காண்பவர்கள் முகம் சுளிக்க நேரிடும். இதற்கு தீர்வு கொதிக்க வைத்த கிரீன் டீ டிக்காஷனில் காலை ஊரவைப்பதுதான்.
இதனால் கால் மிருதுவாவதுடன், நாற்றம் இல்லாமலும் இருக்கும். கால்களின் வெடிப்புகளும் இதனால் மூடிவிடும். வாக்சிங் செய்த பின்னர் உங்கள் கால்கள் வறண்டும், எரிச்சலோடும் காணப்படும். அப்பொழுது கிரீன் டீ டிக்காஷ்னில் ஊற வைத்தால் போதும் உடனடி தீர்வு கிடைக்கும்.
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment