நெல்லை, : கடையநல்லூரில் வரும் 4ம் தேதி அதிமுக பொதுக்கூட்டம் நடைபெறும் என்று மாநகர் மாவட்ட அதிமுக செய லாளர் முத்துக்கருப்பன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர், விடுத்துள்ள அறிக்கை:-
வரும் 4ம் தேதி (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு கடையநல்லூர் பெரிய பள்ளிவாசல் தெருவில் அதிமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடக்கிறது. அமைச்சர் செந்தூர் பாண்டியன் தலைமை வகிக்கிறார். மாநில அமைப்புச் செயலாளர் பி.எச்.பாண்டியன், கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத், வீட்டு வசதி வாரிய தலைவர் முருகையா பாண்டியன் ஆகியோர் பேசுகின்றனர். 
மாநகர் மாவட்ட செயலாளர் முத்துகருப்பன் வரவேற்கிறார். 

முன்னாள் அமைச்சர் நாகூர்மீரான், மாநில விவசாய அணி துணைச் செயலாளர் ஆனைக்குட்டி பாண்டியன், மேயர் விஜிலா சத்யானந்த், எம்எல்ஏக்கள் நயினார் நாகேந்திரன், துரையப்பா, முத்துசெல்வி, மாவட்ட நிர்வாகிகள் பரணி சங்கரலிங்கம், வி.பி.மூர்த்தி, தேவகி குழந்தைவேல், தச்சை கணேசராஜா, சுதாபரமசிவன் மற்றும் நகர, ஒன்றிய கழக நிர்வாகிகள், பிற அணியின் மாவட்ட நிர்வாகிகள், வட்ட கிளைக்கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.  மேலும் மாநகருக்குட்பட்ட பகுதி, நகர, ஒன்றிய கழக சாதனை விளக்க தொடர் கூட்டமும், தெருமுனை பிரசாரமும் நடைபெற உள்ளது. இதற்கான தேதி, இடம், பேச்சாளர் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும். 
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment