கடந்த 2000-வது ஆண்டு வரை இந்த 20 ஆண்டுகால பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டதாக குறிப்பிட்ட பாலமுருகன் தொழில்நுட்ப ரீதியாக அவை 2020-ம் ஆண்டு வரை செல்லுபடியாகும் என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஆனால் புதிய உத்தரவிற்கு இணங்க இத்தகைய பாஸ்போர்ட்டுகளை வைத்திருப்பவர்கள் விசா அல்லது குடியேற்ற நடைமுறைகள் தொடர்பான பிரச்சினைகளைத் தவிர்க்கவேண்டி அவற்றைப் புதுப்பித்துக் கொள்ளுமாறு அவரது அறிக்கை குறிப்பிடுகின்றது.
தங்களின் பாஸ்போர்ட்டுகளில் காணப்படும் காலக்கெடுவின் தொழில்நுட்ப நம்பகத்தன்மையைக் கருத்தில் கொண்டு அவர்கள் நீதிமன்றங்களுக்குக் கூட செல்லக்கூடும். இதனித் தவிர்க்கவே சர்வதேச ஆணையம் தெளிவாக 2015-ம் ஆண்டு நவம்பர் 24-ம் தேதி முடிய என்று உலகக் காலக்கெடுவைத் துல்லியமாகக் குறிப்பிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுகளைக் கொண்டிருப்பவர்கள் பின்னாளில் தங்களுக்கு அரசாங்கக் கொள்கையில் ஏற்பட்ட மாற்றம் குறித்துத் தெரியாது என்று குறிப்பிடுவதைத் தடுக்க வேண்டியே மத்திய அரசு அனைத்துப் பிராந்திய அலுவலகங்களிலும் இந்தத் தகவலை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். எம்பாஸ்போர்ட் மொபைல் சேவை பயன்பாடு தற்போது ஆன்ட்ராய்ட், ஆப்பிள் மற்றும் விண்டோஸ் தளங்களில் கிடைக்கும்.
எனவே பொதுமக்கள் ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலமே பாஸ்போர்ட் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் அறிய முடியும் என்றும் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment