வக்கீல் அப்துல் மஜீத் டாக்டர் மும்தாஜ் தம்பதியினரின் மகன் டாக்டர் அன்சர் M.B.B.S.M.D. (Paed) அவர்களின் புதிய குழந்தைகள் நல சிறப்பு மருத்துவமனையின் கட்டிடப் பணிகள் இறை அருளால் வேகமாக நடைபெற்றுவரும் நிலையில் தற்காலிகமாக முப்புடாதி அம்மன் கோவில் தெருவிலுள்ள அரஃபாத் பாலி கிளினிக் வளாகத்தில் (AKN திருமண மண்டபம் அருகில்) தனது மருத்துவப் பணிகளை தொடர்ந்து வருகிறார். அந்த கிளினிக்கில் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவு
ஏற்படுத்தப்பட்டு மிகச்சிறப்பாக அனைவரும் பாராட்டும் வகையில் சிகிச்சைகள்  நடைபெற்று வருகின்றன . அல்ஹம்துலில்லாஹ்

கடையநல்லூரில் குழந்தைகளுக்கென தனியானதோர் சிறப்பு மருத்துவ மனை இல்லாத குறை இதன்மூலம் இறையருளால் நிவர்த்திக்கப்பட்டுள்ளது . இனி அகால வேளையாக இருந்தாலும் குழந்தைகளுக்கு ஏற்படும் சுகவீனங்களுக்காக மருத்துவர்களைத் தேடி வெளியூர்களுக்கு அலைய வேண்டிய அவசியம் இருக்காது.

எல்லாம் வல்ல அல்லாஹ் டாக்டர் அன்சரின் மருத்துவ சேவைகள் சிறப்படைய நாம் அனைவரும் துஆ செய்வோமாக !






உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment