மேற்குவங்க மாநிலத்தில் Bankura மாகாணத்தில் Kalakuri கிராமத்தில் உள்ள….ஒரு சிறிய கோவிலில் இருக்கும் சாமியார் Lakshmi Kanta Sarkar, குழந்தையை கொடூரமாக கொன்று, அந்த குழந்தையின் ரத்தத்தை குடித்ததாக ஒரு அதிர்ச்சி புகார், புகைப்படத்துடன் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் வெளிவந்தது.
இதனால் ஆத்திரமடைந்த அந்த கிராமத்து மக்கள் அந்த சாமியாரை பிடித்து கட்டி வைத்து உதைத்தனர். பின்னர் போலீஸார் விரைந்து வந்து சாமியாரை கைது செய்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு கடந்த இரண்டு வருடங்களாக மேற்குவங்க மாநில நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு பரபரப்பாக இன்று வெளியானது. சாமியார் குழந்தையை கொலை செய்த குற்றம்
உறுதிப்படுத்தப்பட்டதால், சாமியார் Lakshmi Kanta Sarkarக்கு மரண தண்டனை விதிப்பதாக தீர்ப்பு கூறப்பட்டது. இன்று தீர்ப்பு அளிப்பதாக வந்த தகவலை அடுத்து நீதிமன்றத்திற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment