மனிதநேய மக்கள் கட்சியின் தையல் தொழில் சங்கத்தின் நிர்வாகி அபுதாஹிர் அவர்கள் செல்வபுரம் பகுதியில் இக்லாஸ் டிசைனர் என்கிற பெயரில் டைலர் கடை நடத்தி வருகிறார். அவர் கடையின் அருகே உள்ள முருகன் என்பவர் ஹோட்டல் கடை நடத்தி வருகிறார். மேற்கண்ட இருவருக்கும் சிறிய அளவில் வாய்த்தகராறு நடந்து உள்ளது. அந்த பிரச்சனை காவல் நிலையம் சென்றது. பி 10 காவல் நிலைய ஆய்வாளர் ரவிகுமார் மற்றும் உளவுதுறையை சேர்ந்த தங்கராஜ் ஆகியோர்கள் அபுதாகிர் அவர்களின் கடையை மட்டும் காலி செய்யுமாறு அபுதாகிரை மிரட்டியும் பில்டிங் உரிமையாளரை வற்புறுத்தியும் உள்ளனர். அதை தொடர்ந்து பில்டிங் உரிமையாளரும் அபுதாகிர் கடையை காலி செய்ய வலியிறுத்தினார். அபுதாஹிர் அவர்கள் கடையை காலி செய்ய ஆறு மாத காலம் அவகாசம் கேட்டார். பில்டிங் உரிமையாளரும் அவகாசம் கொடுத்தார்.


ஆனால் காவல் நிலைய ஆய்வாளர் ரவிகுமார் மற்றும் உளவுதுறையை சேர்ந்த தங்கராஜ் ஆகியோர்கள் தொடர்ந்து அபுதாகிர் அவர்களை உடனே கடையை காலி செய் என்றும் இல்லையென்றால் மின் இணைப்பை துண்டித்து விடுவதாகவும் தொடர்ந்து மிரட்டி வந்தார்கள். இதை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியின் தொழில் சங்கம் சார்பில் கோவை செல்வபுரம் பி 10 காவல் நிலையம், மாநகர் மாவட்ட மமக தலைவர் இ.அகமது கபீர் அவர்கள் தலைமையில், மனிதநேய மக்கள் கட்சியினரால் முற்றுகை இடப்பட்டது.

மேற்கண்ட ஆய்வாளர் ரவிகுமாரும் உளவுதுறையை சேர்ந்த தங்கராஜ் ஆகிய இருவரும் அப்பகுதியில் வாழும் முஸ்லிம்கள் மீது ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருகிறார்கள். ஏற்கனவே பத்து மாதங்களுக்கு முன்பு மமக சார்பில் புதிய கொடிகம்பம் வைத்ததற்கு ஒரு பெண் மற்றும் ஊனமுற்ற நபர் என பதினான்கு பேர் மீது பொய் வழக்கு பதிந்தது அவர்களை சிறைக்கு அனுப்பி வைத்தார்கள். அவர்கள் அனைவரும் நீதிமன்ற அனுமதியுடன் ஜாமீனில் வெளியே வந்தனர். அவர்கள் மீது ஆய்வாளர் ரவிகுமார் மற்றும் உளவுதுறையை சேர்ந்த தங்கராஜ் அவர்களும் தொடர்ந்து காழ்புணர்ச்சியுடனும் முஸ்லிம் விரோதபோக்குடன் செயல்பட்டு வருகிறார்கள்.

இதனால் அப்பகுதியில் வாழும் முஸ்லிம்களுக்கு பெரும் அச்சம் ஏற்பட்டு உள்ளது. மேற்கண்ட தகவல்கள் அனைத்தையும் உதவி கமிஷனர் அனிதா அவர்களிடம் மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உதவி கமிஷனர் அனிதா அவர்கள் உறுதி அளித்ததன் பேரில் முற்றுகை வாபஸ் பெறப்பட்டு கலைந்து சென்றனர். இந்த முற்றுகை போராட்டத்தில் 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment