பாப்பங் கால்வாய்:
கடையநல்லூர்வாசிகளால் அவ்வளவு எளிதாக மறக்க முடியாத ஒரு அடையாளம். கருப்பாநதி அணையிலிருந்து வரும் நீரை பாசனத்திற்காக குளங்களிலும் ஏரிகளிலும் கொண்டு சேர்க்கும் பணியை காலம் காலமாக செய்து வந்த ஆறு. இதில் விரால் பாய்ச்சல்களும் மூழ்கி குளித்த பேறும் 90களில் பிறந்தவர்களுக்கு வாய்க்காமலே போய்விட்டது. 90களுக்கு முன் பிறந்தோருக்கும் அது கடந்த காலமாகவே போய்விட்டது.

ஊரையே செழிப்பாக்கி கொண்டிருந்த இந்த ஆற்றை கொஞ்சம் கொஞ்சமாக மாசுபடுத்தி இன்று ஒரு மினி கூவமாக்கிவிட்டனர். இந்த ஆற்றை மாசுபடுத்திய முதல் பெருமை நமது அரசு மருத்துவமனையையே சாரும். மருந்து கழிவுகளை கொட்டி ஆற்றை அசிங்கப்படுத்த தொடங்கியபின்னர் மருத்துவமனைக்கு கிழக்கில் உள்ளோர் தங்களது வீட்டுக்கழிவுகளை ஆற்றில் கலக்கத்தொடங்கினர். இதே பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக மேற்கிலும் பரவி இன்று சாலாப்பரி ( சீவலப்பேரி) குளத்திலிருந்தே இந்த ஆற்றி கால் வைக்க முடியாத அளவுக்கு சீர் கெட்டு போய்விட்டது.
ஒரு நேரத்தில் தண்ணீரை கொண்டு சேர்த்து ஊரை செழிப்பாக்கிய இந்த ஆறு இன்று கொசுக்களின் பிறப்பிடமாக மாறி நோய்பரப்பி வருகிறது. இது குறித்து எந்த ஆட்சியாளர்களுமே அக்கறை கொண்டதாக தெரியவில்லை. இனியாவது இந்த அவலம் மாறி சுகாதாரம் பேணப்படுமா? ஆட்சியாளர்கள் அக்கறை கொள்வார்களா என ஆயிரம் ஆயிரம் எதிர்பார்ப்புகளோடு காத்திருக்கின்றனர் நல்லூர் மக்கள்..
Thanks:எனதூர் கடையநல்லூர்
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment