காங்கிரஸை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்ற நினைத்த பா.ஜ.க, ஊழலைக் காரணம் காட்டி காங்கிரஸை எதிர்க்க முடியாது என்பதை நன்றாக அறிந்து
வைத்திருக்கிறது. ஏனெனில் ஊழலில் காங்கிரஸும் பாஜகவும் சமநிலையில் உள்ளன.
வைத்திருக்கிறது. ஏனெனில் ஊழலில் காங்கிரஸும் பாஜகவும் சமநிலையில் உள்ளன.
அன்னா ஹசாரே என்ற முகமூடியைப் பயன்படுத்த திட்டமிட்டு வாழும்கலை என்ற பெயரில் ச்ங்பரிவாரத்துக்கு ஆள் பிடிக்கும் ரவிசங்கர் என்பவர் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி உண்ணா விரதம் இருக்க வைத்தனர். இதற்கு முன் அன்னா ஹசாரேயை யாருக்கும் தெரியாது.
இதற்காக பெருமளவில் செய்யப்பட்ட விளமபரங்களுக்கும் உண்ணாவிரதத்துக்குவரும் மக்களுக்கு தேவையான வசதிகள் செய்து தருவதற்கும் நான் தான் உதவி செய்தேன் என்று ரவி சங்கரே வாக்கு மூலம் கொடுத்ததாகவும் செய்திகள் வெளிவந்தன பாஜகவினர் தங்களுக்கு ஆதரவான மீடியாக்கள் மூலம் அன்னா ஹசாரேவை தூய்மையின் மறுவடிவம் என்று சித்தரித்தனர்.
தனக்குப் புகழ் கிடைக்கிறது என்பதற்காக காங்கிரஸை மட்டும் ஊழலின் ஒரே அடையளம் என்ற தோற்றத்தை அன்னா ஹசாரே ஏற்படுத்தினார்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் போது காங்கிரஸை ஒழிக்க பாஜவை ஆதரிக்குமாறு அன்னா ஹசாராவை அறிக்கை விடச் செய்தும் பிரச்சாரத்தில் இறக்கியும் ஆதாயம் அடையலாம் என்பது பாஜகவின் கணக்கு.
சங்பரிவாரத்தின் மறைமுக ஆதரவுடன் தான் இப்போராட்டம் நடக்கிறது என்பதை அறியாமல் ஊழலை ஒழிப்பதில் உண்மையான அக்கரையுள்ள இன்னும் சிலரும் அன்னாஹசாரேயுடன் சேர்ந்து கொண்டனர். சங்பரிவாரத்தை எதிர்ப்பதில் உறுதியான பிரசாந்த் பூசன் உள்ளிட்டவர்களும் ஹசாரேக்குப் பின்னால் திர்டண்டனர்.
ஹசாரேயுடன் இணைந்து ஊழல் ஒழிப்பில் இறங்கிய கெஜ்ரிவால், பிரசாந்த் பூசன் போன்றவர்கள் ஹசாரே காங்கிரசின் ஊழலை மட்டும் எதிர்ப்பதையும், கர்நாடக்
சுரங்க ஊழல், லோக்பால் அமைக்க மறுக்கும் மோடியின் ஊழல் ஆகியவற்றைக் கண்டு கொள்ளாமல் ஹசாரே இருப்பதையும் அவர்கள் விளங்கிக் கொண்டனர்.
சுரங்க ஊழல், லோக்பால் அமைக்க மறுக்கும் மோடியின் ஊழல் ஆகியவற்றைக் கண்டு கொள்ளாமல் ஹசாரே இருப்பதையும் அவர்கள் விளங்கிக் கொண்டனர்.
தங்களுக்கு ஆதரவாகத் திரளும் மக்கள் காங்கிரஸின் ஊழலை மட்டுமின்றி பாஜகவின் ஊழலையும் எதிர்ப்பவர்கள் இரண்டும் அல்லாத இன்னொரு மாற்று சக்தியைத்தான் எதிர்பார்க்கிறார்கள் என்று அவர்கள் துல்லியமாகக் கணக்கிட்டனர்.
அன்னா ஹசாரே பாஜகவின் கைக்கூலி என்பதையும் அவர்கள் விளங்கிக் கொண்டு நாமே தனிக் கட்சி ஆரம்பித்தால் என்ன என்று சிந்தித்து களமிறங்கினார்கள்.
காங்கிரஸ் எதிர்ப்பு அலையைப் பயன்படுத்தி வெற்றி பெற நினைத்தவர்களின் வாயில் கெஜ்ரிவால் மண்ணை அள்ளிப்போட்டார். ஹசாரேவுக்குப் பின்னால் திரட்டப்பட்ட மக்களில் 90 சதவீதம் பேரைத் தன்னுடன் இழுத்துச் சென்று ஆம் ஆத்மி (பொதுஜனம்) என்ற பெயரில் கட்சியை ஆரம்பித்தார். டெல்லி தேர்தலில் மிகப்பெரும் வெற்றி பெற்றதன் மூலம் சரியான மாற்று அணி இருந்தால் காங்கிரஸ் எதிர்ப்பு ஓட்டுக்கள் பீஜேபிக்குப் போகாது என்பதை நிரூபித்துக் காட்டினார்.
தான் விரித்த வலையில் தானே விழுந்த கதைக்கு பாஜவின் இந்தக் கேடுகெட்ட செயலைத் தவிர வேறு சிறந்த உதாரணம் இருக்க முடியாது.
ஆம் ஆத்மி ஆரம்பித்து அதற்கு மக்கள் ஆதரவு பெருகி வருவதைக் கண்டுகொண்ட பின்தான் ஹசாரேயின் ஆதரவு இனி ஒன்றுக்கும் உதவாது என்பதை உணர்ந்து மோடியை வைத்து பெறப் பார்ப்போம் என்று தனது பாதையை மாற்றிக்கொண்டது பாஜக. அன்னா ஹசாரேக்கு சிலர் சிலை வைக்க முயன்ற போது அதற்கு எதிர்ப்பு எழுந்தது. உடனே தனது சிலையை வைக்க ஆதரவு கேட்டு ஹசாரே பாஜகவுக்கு கடிதம் எழுதினார். தனது சிலையை வைக்க தானே ஆசைப்படும் புகழ் விரும்பி என்பதும் பாஜகவின் கைக்கூலி என்பதும் இதன் மூலம் இன்னும் நிரூபணமானது. இந்தக் கடிதம் இவர்களின் கூட்டுச் சதியை இன்னும் தெளிவாக நாட்டு மக்களுக்கு உணர்த்தி விட்டது.
சங்பரிவாரத்தால் ஊதிப்பெரிதாக்கப்பட்ட ஹசாரே கெஜ்ரிவாலை ஊதிப்பெரிதாக்கினார். ஆனால் ஹசாரேயை பாஜக ஊதியதை விட ஹஸாரே கெஜ்ரிவாலை அதிகம் ஊதிப் பெரிதாக்கிவிட்டார். நான் ஆம் ஆத்மியை ஆதரிக்கவில்லை என்று தேர்தல் நேரத்தில் ஹசாரே பேட்டி கொடுத்தும் அது மக்களிடம் எடுபடாமல் போய்விட்டது. மக்கள் ஊழலை ஒழிக்க காங்கிரஸ் பாஜக அல்லாத இன்னொரு சகிதியைத் தான் எதிர்பார்த்த்தார்களே தவிர காங்கிரசுக்கு எதிர்ப்பை ஏற்படுத்தி அதன் ஆதாயத்தை பீஜேபி அடைவதை மக்கள் விரும்பவில்லை.
நரேந்திர மோடிக்கு பில்டப் கொடுத்த ஊடகங்கள் மோடியில் பெண் தொடர்பு காரணமாக அவரை அருவறுப்பாக பார்த்தனர். எப்படி பல்டி அடிப்பது என்று தெரியாமல் விழித்தனர். ஆம் ஆத்மியில் டெல்லி வெற்றிக்கும் பிறகு மோடியைக் கீழே போட்டு விட்டு ஆம் ஆத்மி புகழ் பாட ஆரம்பித்து விட்டனர்.
டெல்லி தேர்தலுக்குப் பின் காங்கிரஸும் வேண்டாம்; பாஜகவும் வேண்டாம் என்று விரும்பக் கூடிய மக்கள் ஆம் ஆத்மியின் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளனர். இதை உணர்ந்து கொண்ட ஆம் ஆத்மியும் 300 இடங்களில் வேட்பாளர்களை நியமிக்கப்போவதாக அறிவித்துள்ளது.
மோடியின் பிரதமர் கனவு கெஜ்ரிவால் மூலம் களைந்து விட்டதாகவே நமக்குத் தெரிகிறது.
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment