கடையநல்லூர் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பள்ளி மாணவிகள் பலர் கடையநல்லூரில் உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர். 

இந்நிலையில் காலையில் மாணவிகள் பள்ளிக்கு செல்லும் போதும், மாலையில் பள்ளி விட்டு வரும்போதும் மாணவிகள் சிலரிடம் வாலிபர்கள் கேலி கிண்டல் செய்து வந்தனர். மேலும் மோட்டார் சைக்கிளில் துரத்தியும் தொந்தரவு செய்தனர்.
இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் புகார் தெரிவித்தனர். பெற்றோர்கள் மாணவிகளை கேலி செய்யும் வாலிபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென போலீசாரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து கடையநல்லூர் போலீசார் மாறு வேடங்களில் பஸ் நிலையம் மற்றும் முக்கிய இடங்களில் நின்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது பள்ளி, கல்லூரி மாணவிகளை பார்த்து கேலி செய்த வாலிபர்களை கண்டுபிடித்த போலீசார் அவர்களை அங்கிருந்து விரட்டியடித்தனர். மேலும் அவர்களை எச்சரித்து அனுப்பினர். 3 வாலிபர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. போலீசாரின் நடவடிக்கைக்கு அப்பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment