திருமணமான புது தம்பதிகள் மருத்துவமனைக்கு வரும்பொழுது (pregnancy confirmed) உங்கள் மனைவியின் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டுள்ளது, என நான் சொல்லும் அந்த தருணம் பெண் சந்தோஷப்படுகிறாள், ஆண் பெருமை படுகிறான், பெண் மனதில் 9மாத காலம் குழந்தையை எப்படி பாதுகாப்பது என சிந்திப்பாள், ஆனால் ஒரு ஆண் மனைவி குழந்தை இரண்டு பேரையும் எப்படி பாதுகாப்பது என சிந்தித்து கொண்டு இருப்பான்.


பெண் மனதில்10% அன்பு இருந்தால் அதை 100% வெளிப்படுத்துவாள், ஆனால் ஆண் மனதில் 100% அன்பு இருக்கும் ஆனால் 10% அன்பை கூட வெளிப்படுத்த தெரியாது,


ஆண்களுக்கு கோபத்தை வெளிப்படுத்த தெரிந்த அளவுக்கு அவர்கள் மனதில் இருக்கும் அன்பையும் முழுமையாக வெளிப்படுத்தி இருந்தால் பெண்களைவிட ஆண்களே அன்புக்குறியவர்கள் என்ற உண்மை இந்த உலகத்திற்க்கு தெரிந்து இருக்கும்.


அறிவு தளத்தில் வேண்டுமானால் சில நேரங்களில் பெண்கள் ஆண்களைவிட உயர்வாக தெரியலாம், ஆனால் அன்பு தளத்தில் எப்பொழுதும் பெண்களை விட ஆண்களே உயர்ந்துள்ளனர் என்பதை என்னால் உறுதிபட சொல்ல முடியும்.


உண்மையை சொன்ன DR அவர்களுக்கு நன்றி...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment