அஸ்ஸலாமு அலைக்கும் பேட்டை முஸ்லிம் மாணவர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் இன்று (28-9-14) காலை 12 மணியளவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைவர். அரேபியன் மைதின், செயலாளர். அபுதாஹிர், பொருளாளர் இல்லியாஸ் ஆகியோர் தலைமை வகித்தார்கள். H.M. பாதுஷா சார் முன்னிலை வகித்தார் உறுப்பினர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டார்கள். இக்கூட்டத்தில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் ஆலோசனைப்படி PISA வின் கீழ்காணும் அஜெண்டா உருவாக்கபட்டது. * நமது பேட்டை முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியின் வளர்ச்சிக்காகவும் மற்றும் பேட்டை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியிலுள்ள மாணவர்களின் கல்வி வளர்ச்சிகாகவும் வழிகாட்டுதலுக்காகவும் ஆரம்பிக்கபட்ட அமைப்பே PISA ஆகும். * எதிர்கால தேவையே கருத்தில் கொண்டு பேட்டை மற்றும் சுற்றுபுற பகுதியிலுள்ள இளைஞர்களை இந்த PISAவில் உறுப்பினர்களாக இணைத்தல். * ஆங்கிலவழிகல்வியை இப்பள்ளியில் ஏற்படுத்த ஊக்குவிப்பது. * மாணவர்களின் தனித்திறமையே வளர்தல் மேற்படிப்பிற்கு செல்லும் மாணவர்களுக்கு நல்வழிகாட்டுதல். * தேவையான கல்வி உபகரணங்கள் வழங்குதல். * திறமையான மாணவர்களை தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுத்தல். * கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை உருவாக்கி தேர்ச்சி சதவீகத்தை அதிகரிக்க உதவுதல். * தனியார் வழங்கும் கல்வி உதவித்தொகையே பெற்று கொடுத்தல். * மாணவர்களுக்கு தேர்வுக்கு வழிகாட்டுதல். * வெளிநாட்டில் இருக்கும் PISA இளைஞர்களின் உதவியுடன் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குதல். * ஆசிரியர்களை ஊக்குவித்தல் * தீன்யாத் வகுப்புகளை (மார்க்க கல்வி) ஏற்படுத்த ஊக்குவித்தல். * துபாயிலும், சவுதியிலும் கிளைகள் ஆரம்பிக்கபட்டு பொறுப்பாளர்கள் தேர்தெடுத்து செயல்படுத்துதல். போன்ற அஜெண்டாக்கள் உருவாக்கபட்டது. அனைவருக்கும் உறுப்பினர் படிவம் வழங்கபட்டு உறுப்பினர் படிவம் பூர்த்தி செய்யும் பணி துவங்கபட்டது. PISA வின் உறுப்பினர் படிவத்தை பெறவதற்கு அரேபியன் மைதின் 99 65 039092 மற்றும் இல்லியாஸ் 98 42 516968 ஆகியோரை தொடர்பு கொள்ளவும். இறுதியாக இக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர்களுக்கும், கலந்து கொண்டவர்களுக்கும் செயலாளர் அபு நன்றி தெறிவித்தார்.








உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment