கடையநல்லூர் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இதற்காக செப்.19க்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் கூறியிருப்பதாவது:
தமிழக அரசின் வேலைவாய�ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் கடையநல்லூரில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் நேரடி சேர்க்கை மூலம் பயிற்சியாளர்கள் சேர்க்கப்படுகின்றனர். இதற்கான விண்ணப்பங்கள் வீ.கே.புதூர், அம்பை, தென்காசி, பேட்டை, நெல்லை ஆகிய தொழிற்பயிற்சி நிலையங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.
பொருத்துநர், மின் பணியாளர், கம்மியர் மோட்டார் வண்டி ஆகிய பிரிவுகளில் 2 ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படும். இதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கம்பியாள் பிரிவுக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி போது மானது. 2 ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படும். பற்றவைப்பவர் பிரிவுக்கு ஓராண்டு பயிற்சி அளிக�கப்படும். 8ம் வகுப்பு தேர்ச்சி போதுமானது.
இந்த பயிற்சி நிலையத்த�ல் பயிற்சியில் சேரும் அனைவருக்கும் இலவச சைக்கிள், லேப்டாப், சீருடை, காலணி, இலவச பஸ் பாஸ் மற்றும் மாதம் தோறும் உதவித் தொகை ரூ.500 வழங்கப்படும். வருமான உச்ச வரம்பு எதுவும் கிடையாது.
எனவே கடையநல்லூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ.50 மட்டும் அலுவலகத்தில் செலுத்தி விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் செப்.19ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். மேலும் விவரங்களுக்கு பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment