நெல்லை, : செங் கோட்டை நுகர்வோர் பாதுகாப்பு குழு செய லாளர் சீனிவாசன் தெற்கு ரயில்வே பொதுமேலாள ருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கொல்லம்- சென்னை மீட்டர் கேஜ் ரயில் சேவை நிறுத்தப்பட்ட பின்னர், விருதுநகர் முதல் செங் கோட்டை வரையுள்ள மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் பொதிகை எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வருகிறது. இப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் கூடுதல் ரயில்கள் இயக்க பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித பலனும் இல்லை.

இந்நிலையில் செங் கோட்டை முதல் விருதுநகர் வரையுள்ள மக்கள் சென்னை செல்வதற்கு பயன்படுத்தி வரும் ஒரே எக்ஸ்பிரஸ் ரயிலான பொதிகையில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள பிரிமீயம் தட்கல் முறை ஏழை, நடுத்தர மக்களை அதிகம் பாதிக்கிறது. பல்வேறு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயங்கி வரும் வழித்தடத்தில் இம் முறையை அறிமுகம் செய் வதை விட்டுவிட்டு, ஒரே யொரு ரயில் இயங்கும் வழித்தடத்தில் அமல்படுத்துவதால், பயணிகளுக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது.

பிரிமியம் டிக்கெட் முறை என்பது உயர்தர மக்கள் மட்டுமே பதிவு செய்வதற்கு ஏற்றதாகும். முன்பதிவு டிக்கெட்டுகளை பதிவு செய்யும் நடுத்தர வர்க்கத்தினர் இம்முறையை ஏற்பதில்லை. எனவே பொதிகை எக்ஸ்பிரசில் காணப்படும் பிரிமியம் டிக்கெட்டுகளை உடனடியாக ரத்து செய்ய கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment