கடையநல்லூரில் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் – நர்சுகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். டாக்டர் சண்முகையா தலைமையில் ஆஸ்பத்திரி வளாகத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு இறந்தவர் உடலை கொண்டு வந்து உயிருடன் இருப்பதாக கூறி நாடகமாடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், டாக்டர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும், டாக்டர்களை ஆபாச வார்த்தைகளால் பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் இந்த போராட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் டாக்டர் கள் தங்கசாமி, அனிதா பாலின், மீனாட்சி மற்றும் நர்சுகள், மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

30 பேர் மீது வழக்கு

இதற்கிடையில் கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் பணியாளர்களை பணி செய்யவிடாமல் தடுத்து, ஆஸ்பத்திரியின் கதவுக்கு பூட்டு போட்டதாக பலர் மீது அரசு ஆஸ்பத்திரி டாக்டர் தங்கசாமி போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில், 30 பேர் மீது கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment