செங்கோட்டை, ஏப். 6–
தமிழக கேரளாவை இணைக்கும் கொல்லம் – திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஆரியங்காவு ரயில்வே பாலமானது இரு மாநிலத்தையும் வர்த்தக உறவு ஏற்படுத்தும் பாலம் என்றே சொல்லலாம்.
ஆரியங்காவு செக்போஸ்ட் அருகில் உள்ள இச்சாலையில் அமைந்துள்ள இந்த பாலம் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்தது. அவ்வளவு முக்கியம் வாய்ந்த பாலத்தின் வழியாக நாள்தோறும் தமிழகம் மற்றும் அல்லாமல் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதியில் இருந்து காய்கறிகள், முட்டை, மீன்வண்டிகள், பால், பூ வண்டிகள் என நூற்றுக்கணக்கில் கேரளாவுக்கு சரக்கு வண்டிகள் சென்று வருகின்றன. மேலும், கொல்லம், கோட்டயம், கொச்சி, திருவனந்தபுரம், புனலூர் ஆகிய பகுதிகளுக்கு இரு மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஏராளமான அரசு பேருந்துகளும் வந்து செல்கின்றன.
அவ்வாறு வரும் வாகனங்கள் அனைத்தும் ஆரியங்காவு குறுகியபாலத்தின் வழியாகத்தான் செல்ல வேண்டி உள்ளது. மேலும் பாலம் பலவீனமாக உடைந்த நிலையில் காணப்படுவதோடு, சிதிலமடைந்து விழும் நிலையில் இருந்ததால் அந்த பாலத்தை உடனே செப்பனிடவேண்டும், இல்லையேல் பெரிய அளவிலான விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது என அரசுக்கு பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்து வந்தனர்.
மக்களின் பயன்பாட்டிற்கு பிரதான சாலையாக திகழும் இச்சாலைக்கு மாற்றுப் பாதை எதுவும் கிடையாது.
மேலும் குறுகிய பாலத்தில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல், விபத்துகள் ஏற்பட்டு பொதுமக்களும், வியாபாரிகளும் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
இதனால் இந்த பாலத்தை கட்ட வலியுறுத்தி கேரள மக்கள் அரசு கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் பல்வேறு போராட்டங்களை நடத்தினர் . அதன் பயனாக அங்கு புதிய பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
எனினும் புதிய பாலம் கட்டப்பட்டால் இரு மாநில வர்த்தக தொடர்புகள் துண்டிக்க படுமோ? என்று பொது மக்கள் அஞ்சிய நிலையில் மக்களை மகிழ்விக்கும வகையில் தற்போது புதிதாக 16 மீட்டர் நீளத்திற்கு பழையபாலம் அருகே புதிய பாலம் கட்டும் பணிகள் துவங்கபட்டு வருவதால் இரு மாநில வியாபாரிகளும், பொதுமக்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இருப்பினும் இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment