28-01-14 அன்று நெல்லையில் நடைபெற்ற சிறை செல்லும் போராட்டம் அல்லாஹ்வின் கிருபையால் சிறப்பாக நடைபெற்றது. கடையநல்லூரில்
கடையநல்லூர் வரலாற்றில் இதுவரை ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என்று இத்தனை நபர்கள் எந்த ஒரு போராட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை என்றால் மிகையாகாது. காலை 6:00மணி முதல் அனைவரும் வாகனத்தை நோக்கி வந்துவிட்டனர். கலந்து கொண்ட மக்களுக்கு உணவு ஏற்பாடும் செய்யப்பட்டது.
உணவு வழங்கி கூட்டத்தை கூட்டுகின்றனர் என்ற ஓயாத பல அவதூறுகள் ஒருபக்கம் இருந்தாலும், எந்த ஒரு கார்பரேட் நிர்வனங்களிடம் இருந்தும் பொருளாதரத்தை பெறாமல் முழுக்க முழுக்க பொதுமக்களிடம் இருந்து பொருளாதாரத்தை கிளைகள் சார்பில் வசூல் செய்து. அந்த பொது மக்களை போராட்டத்தில் கலந்து கொள்ள செய்தனர்.
கிளை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மிகப்பெரிய அளவில் இதற்காக இரவு, பகல்பாராது பங்காற்றினர். அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.
அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வரும் போது,
அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும் போது,
உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்.(110 வது அத்தியாயம் )
Tweet
Post a Comment