கடையநல்லூர் அருகே உள்ள புன்னையாபுரம் ரைஸ்மில்தெருவை சேர்ந்தவர் சுப்பையா. இவரது மனைவி மாரிமுத்து (வயது 40). நேற்று இவர் அங்குள்ள வயலுக்கு சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் திடீரென மாரிமுத்து கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை பறித்தனர். சுதாரித்து கொண்ட மாரிமுத்து செயினை பறிக்க விடாமல் தடுத்தார். இருப்பினும் பாதி செயினை பைக் கொள்ளையர் பறித்து விட்டு தப்பினர். பறிபோன நகையின் மதிப்பு ரூ.70ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இது குறித்து சொக்கம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி பைக்கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தனியாக செல்லும் பெண்களிடம் பைக் கொள்ளையர் நகைபறிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதனால் பெண்கள் தனியாக செல்லவே பயப்படுகின்றனர். எனவே பைக்கொள்ளையர் அட்டகாசத்தை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment