பொதிகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட அனைத்து ரயில்களுக்கும் ரயில் பயணக் கட்டணம், இன்று முதல் உயர்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, பயணிகள் கட்டணம் 14.2 சதவீதமும், சரக்கு கட்டணம் 6.5 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த கட்டண உயர்வுகள் இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பொதிகை எக்ஸ்ப்ரஸில் தற்போது கடையநல்லூர் இருந்து சென்னை எழும்பூர் செல்ல தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளில் பயணம் செய்ய 335 ரூபாயும்-தட்கல் டிக்கெட்டில் பயணம் செய்ய 425 ரூபாயும் வசூலிக்கப்பட்டு வந்தது. புதிய கட்டணப்படி தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளில் பயணம் செய்ய 380 ரூபாயும்-தட்கல் டிக்கெட்டில் பயணம் செய்ய 480 ரூபாயும் வசூலிக்கப்படும்.
மூன்றடுக்கு ஏசி பெட்டிகளில் பயணம் செய்ய 870 ரூபாயும்-தட்கல் டிக்கெட்டில் பயணம் செய்ய 1130 ரூபாயும் வசூலிக்கப்பட்டு வந்தது. புதிய கட்டணப்படி மூன்றடுக்கு ஏசி பெட்டிகளில் பயணம் செய்ய 985 ரூபாயும்-தட்கல் டிக்கெட்டில் பயணம் செய்ய 1255 ரூபாயும் வசூலிக்கப்படும்.
இரண்டடுக்கு ஏசி பெட்டிகளில் பயணம் செய்ய 1230 ரூபாயும்-தட்கல் டிக்கெட்டில் பயணம் செய்ய 1570 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. புதிய கட்டணப்படி இரண்டடுக்கு ஏசி பெட்டிகளில் பயணம் செய்ய 1400 ரூபாயும்-தட்கல் டிக்கெட்டில் பயணம் செய்ய 1790 ரூபாயும் வசூலிக்கப்படும்.
பொதிகை எக்ஸ்பிரஸ் முன்பதிவு இல்லாத பெட்டியில் சென்னை செல்ல ரூ.165 ஆக இருந்த கட்டணம் ரூ.190 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. சூப்பர்பாஸ்ட் ரயிலில் உள்ள பொதுப் பெட்டியில் பயணம் செய்தால் மேற்கண்ட கட்டணத்துடன் ரூ.15 கூடுதலாக செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மதுரை-செங்கோட்டை-மதுரை பயணிகள் ரயிலில் கடையநல்லூர் இருந்து மதுரை செல்ல 30 ரூபாயும், கடையநல்லூர்-திருநெல்வேலி-கடையநல்லூர் (வழி: தென்காசி) ரயிலில் 20 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த வழித்தட கட்டணத்தில் மாற்றமில்லை.
பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள் இன்று முதல் கூடுதல் கட்டணத்தை ரயில் டிக்கெட் பரிசோதகரிடம் கொடுத்து பயணம் செய்து ரசீது பெற்று கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு கடையநல்லூர் ரயில் நிலைய அதிகாரியே (04633-240241) தொடர்பு கொள்ளலாம்.
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment