கடையநல்லூர் வனப்பகுதியில் ஆக்கிரமித்ததாக கூறி வனத்துறையால் விரட்டியடிக்கப்பட்ட பழங்குடியின மக்களை அதே இடத்தில் மீண்டும் குடியமர்த்த தகுதி யின் அ டிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம், கடையநல்லூர் வனச்சரகம் மேக்கரை அணைக்கட்டு அருகே ஆளகுண்டன் என்னுமிடத்தில் மலை பண் டாரம் என்னும் பழங்குடியினத்தைச் சேர்ந்த 6 குடும்பத்தினர் குடிசை அமைத்து பல ஆண்டுளாக வசித்து வந்தனர். அந்த இடத்தை சுற்றி மா, பலா, தென்னை, வாழை உள்ளிட்ட மரங் களை வளர்த்து வந்தனர்.
வனப்பகுதி நிலத்தை ஆக்கிரமித்ததாக கடந்த 2004ம் ஆண்டு அப் போதைய கடையநல்லூர் வனச்சரகர் முத்துப்பாண்டியன் தலைமையில் வனத் துறை ஊழியர்கள் சிலர் வீடுகளை இடித்தும், மரங் களை வெட்டியும் அழித்தனர். இதையடுத்து அங்கு வசித்த பழங்குடியினர் கருப்பாநிதி, புளியங்குடி வனப்பகுதியில் உள்ள தங்களது உறவினர்களின் வீடுகளில் தஞ்சம் புகுந்தனர்.
தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாக கூறி அவர்கள் கடந்த 25.5.2004ல் மாநில முதன்மை வனப் பாதுகாவலரிடம் புகார் செய்தனர். தங்களை மீண்டும் அதே இடத்தில் குடியமர்த்த வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண் டனர். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதையடுத்து மேக்கரை ஆதிவாசிகள் விடுதலை முன்னணி நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், சுரேந்தர் ஆகியோர் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தனர். அதில், வனத்துறையின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட தங்களை மீண்டும் அதே இடத்தில் குடியமர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். பழங்குடியின மக்கள் தரப்பில் மூத்த வக்கீல் லஜபதிராய், வனத் துறை சார்பில் அரசு வக்கீல் வேல்முருகன் ஆஜராகி வாதாடினர்.
இரு தரப்பு வாதங் களையும் கேட்ட நீதிபதி மகாதேவன் தகுதியின் அடிப்படையில் ராமகிருஷ் ணன், சுரேந்தர் ஆகியோரது விண்ணப்ப மனுவை பரிசீலனை செய்து அவர் களை மீண்டும் அதே இடத் தில் குடியமர்த்த 8 வார காலத்திற்குள் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென மாநில முதன்மை வனபாதுகாவலர், நெல்லை கலெக்டர், மாவட்ட வன அலுவலர் ஆகியோருக்கு உத்தரவிட்டார்.


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment