இலங்கையில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் கடந்த 21ம் தேதி நெல்லை சந்திப்பு ரயில்நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
அப்போது தமுமுகவிலிருந்து நீக்கப்பட்டதாக கூறப்படும் மாவட்ட தலைவர் மைதீன்பாரூக் தலைமையில் 10க்கும் மேற்பட்டவர்கள் வந்து, �நாங்கள் தான் உண்மையான தமுமுக என்பதை பொதுக்குழுவைக் கூட்டி நிரூபித்துள்ளோம். அதற்கான கோர்ட் உத்தரவு எங்களிடம் உள்ளது� என்று கூறினார்கள்.
இதனால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
ஜங்ஷன் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையில் மைதீன் பாரூக்குடன் வந்தவர்கள் தங்களை தாக்கியதாகக் கூறி நெல்லை கிழக்கு மாவட்ட தமுமுக பொறுப்புக்குழு உறுப்பினர் அப்துல் வாஹித் நெல்லை உதவி கமிஷனரிடம் புகார் அளித்தார்.
அதில், �நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்த போது மைதீன் பாரூக், அவரது சகோதரர் பிலால், டவுன் கரிக்காதோப்பைச் சேர்ந்த எம்.ஏ.கே.பீர், எம்.ஏ.கே. நசீர் உட்பட 10க்கும் மேற்பட்டோர் அத்துமீறி நுழைந்து தகராறு செய் தனர்.
மேலும் எங்களை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளனர்.
இதேபோல் மைதீன் பாருக் தரப்பினரும் தமுமுக நிர்வாகிகள் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment