கடும் வறட்சியால் கடையநல்லூர் அருகே உள்ள அடவி நயினார் அணை குட்டை போல் மாறி விட்டது. நீர்க்கசிவை தடுக்க அணையில் பராமரிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.
நெல்லை மாவட்டம், கடையநல்லூரை அடுத்து மேக்கரையில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அடவி நயினார் அணை அமைந்துள்ளது. 2001ம் ஆண்டு உலக வங்கி உதவியுடன் சுமார் 65 கோடி ருபாய் மதிப்பீட்டில் இந்த அணை கட்டப்பட்டது. 132.2 அடி கொள்ளளவும், 670 மீட்டர் நீள மும் கொண்ட இந்த அணையில் கரிசல்கால், மேட்டுக்கால் என்று இரு தலை மதகுகளும் 100 மீட்டர் நீளத்திற்கு ஒரு நீர் வழிந்தோடியும் உள்ளது. இந்த அணையின் மூலம் 12 கிராமங்களை சேர்ந்த 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

தற்போது கோடை வெயில் கடுமையாக கொளுத்துவதால் அணை யில் நீர் இருப்பு வேகமாக குறைந்து குட்டையாக காட்சியளிக்கிறது. தற்போது, 17 அடி தண்ணீர் மட்டுமே இருப்பதால் அணையின் உட்பகுதியில் உள்ள மரங்கள், பாறைகள் வெளியே தெரிகின்றன. இதற்கிடையே கடந்த சில ஆண்டுகளாக அடவி நயினார் அணையில் கசிவு ஏற்பட்டு தண்ணீர் அதி களவு வீணாக வெளியேறியது. எனவே, அணையை பழுது பார்த்து மேம்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, அடவிநயினார் அணையில் ரூ.2.75 கோடி மதிப்பீட்டில் சீரமைப்பு பணி மேற் கொள்ள அரசு அனுமதி வழங்கியது. டெண்டர் விடப்பட்டு தற்போது சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.
இதுவரை 50 சதவீத பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது காலரி பணி துவங்கி நடைபெற்று வருகிறது. அணையின் உட்புறம் நடைபெறும் இப்பணி மூலம் கசிவு நீர் தடுக்கப்பட்டு அணைக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற் படும். இதனால், விவசாயி கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அணையின் உட்புறமுள்ள வழிந்தோடியில் கசிவை சரிசெய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment