கடையநல்லூர் எவரெஸ்ட் பாலிடெக்னிக்கில் யூ.ஆர்.சி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் (இந்தியா) நிறுவனம் சார்பில் வளாக கேம்பஸ் இன்டர்வியூ நடந்தது. இதில் எவரெஸ்ட் பாலிடெக்னிக் மாணவர்கள் மற்றும் பாவூர்சத்திரம் எம்எஸ்பிவிஎல், சேரன்மகாதேவி ஸ்காட், தூத்துக்குடி சாமுவேல்ஸ் மற்றும் தென்காசி யுஎஸ்பி பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண் டனர்.
யு.ஆர்.சி கன்ஸ்ட்ரக்ஷன் குழுமத்தை சேர்ந்த தேர்வாளர்கள் மோகனசுந்தரம், மோகன்பாபு, சங்கரராமசுப்பிரமணியன், வினோத் மற்றும் கணேஷ் ஆகியோர் பங்கேற்று வேலைவாய்ப்பு முகாமை நடத்தினர். இதில் சுமார் 180 மாணவ&மாணவி கள் கலந்து கொண்டதில் 78 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் வழங்கப்பட்டது. பணி நியமனம் வழங்கும் விழாவுக்கு எவ ரெஸ்ட் கல்வி குழும தாளாளர் முகைதீன்அப்துல்காதர் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் கங்காதரன் முன்னிலை வகித்தார். கல்லூரி பயிற்சி அலுவலர் செண்பகராஜன் நன்றி கூறினார். முகாமில் கல்லூரி துறைத்தலைவர்கள் ராமசுப்ரமணியன், ரமீஸ்சுலைமான், வெங்கடாசலம் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாக அலுவலர் செய்யதுஅலி செய்திருந்தார்.
கடையநல்லூர் எவரெஸ்ட் பாலிடெக்னிக்கில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் தேர்ச்சி பெற்ற மாணவருக்கு யுஆர்சி கன்ஸ்ட்ரக்ஷன் குழும மனிதவள மேம்பாட்டு துணைத்தலைவர் சுரேஷ்கண்ணன் பணி நியமன ஆணை வழங்கினார். அருகில் கல்லூரி தலைவர் முகைதீன்அப்துல்காதர் மற்றும் பலர்.
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Post a Comment