கடையநல்லூர் அருகேயுள்ள சொக்கம்பட்டி அருள்மிகு சந்தன மாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை(மே-2) பூக்குழி நடைபெறுகிறது.
இக்கோயிலின் சித்திரைத் திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை காப்புக் கட்டுடன் தொடங்கியது. அன்று முதல் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோயிலில் விரதமிருந்து வருகின்றனர். இதையடுத்து பூக்குழித் திருவிழா புதன்கிழமை தொடங்குகிறது. அன்று காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரங்களுடன் சிறப்புப் பூஜைகள் நடைபெறும். மதியம் அன்னதானம் நடைபெறுகிறது. இரவில் திருவிளக்குப் பூஜை நடைபெறுகிறது.
வியாழக்கிழமை சிறப்பு ஹோமங்கள் நடைபெறுகிறது. தொடர்ந்து தீர்த்தக்குடம் எடுத்து வரும் பைபவம் நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை சப்பர பவனி, அக்னிச் சட்டி ஊர்வலம் நடைபெறுகிறது. தொடர்ந்து பூக்குழி இறங்கும் வைபவம் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment