கடையநல்லூர் அருகே உள்ள சுந்தரேசபுரத்தில் உள்ள ஒரு பள்ளியில் கடந்த 24–ந்தேதி பாராளுமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்தது. அப்போது அப்பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் கருத்தப்பாண்டி என்பவர் பொதுமக்களிடம் இரட்டைஇலைக்கு வாக்களிக்குமாறு கூறினாராம். அதனை அப்பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகரும், போகநல்லூர் பஞ்சாயத்து தலைவருமான தங்கபாண்டியன், மற்றும் முனியாண்டி, முருகேசன், மாரிமுத்து ஆகிய 4 பேரும் சேர்ந்து தட்டிகேட்டதோடு கருத்தபாண்டிக்கு கொலை மிரட்டல் விடுத்தனராம். இது குறித்த புகாரின் பேரில் சொக்கம்பட்டி போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இதனிடையே அப்பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் அண்ணாதுரை என்பவர் புதிய தமிழகம் கட்சிக்குவாக்களிக்குமாறு பொதுமக்களிடம் கூறினாராம். இதனை அ.தி.மு.க. பிரமுகரான கருத்தப்பாண்டி மற்றும் முருகன், முத்துகுமார், சுப்பையாபாண்டியன், முருகேசன், மற்றொரு சுப்பையாபாண்டியன், மைக்கேல்சாமி, இசக்கிபாண்டியன் ஆகிய 8 பேர் சேர்ந்து தட்டிக்கேட்டதோடு அண்ணாதுரைக்கு கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இது குறித்த புகாரின் பேரில் போலீசார் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவத்தால் சுந்தரேசபுரம் பகுதியில் தி.மு.க.–அ.தி.மு.க.வினரிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment