ஏற்கனவே இதுகுறித்து செய்திகள் வெளியாகி வந்தன. தற்போது யுவனே தனது டிவிட்டர் தகவலில் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.
யுவன் சங்கர் ராஜாவின் இந்த டிவிட்டர் தகவல் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. அதேசமயம், தான் 3வதாக யாரையும் திருமணம் செய்யவில்லை என்றும் யுவன் மறுத்துள்ளார்.
பிசியான இசையமைப்பாளர்
கோடம்பாக்கத்தின் பிசியான இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா. அவர் தற்போது அஞ்சான் படத்திற்கு இசை அமைத்துக் கொண்டிருக்கிறார்.
மதம் மாறினாரா...
இந்நிலையில் யுவன் முஸ்லிமாக மாறிவிட்டதாகக் கூறப்பட்டது. மேலும் யுவன் 3வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும் வேறு செய்திகள் வெளியாகின.
யுவன் சொல்வது என்ன...
இது குறித்து யுவன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
நான் இஸ்லாத்தை பின்பற்றுகிறேன். அதற்காக நான் பெருமைப்படுகிறேன். அல்ஹம்துலில்லாஹ்.
நான் இஸ்லாத்தை பின்பற்றுகிறேன். அதற்காக நான் பெருமைப்படுகிறேன். அல்ஹம்துலில்லாஹ்.
குடும்பத்தினர் ஆதரவு
என் முடிவை எனது குடும்பத்தார் ஆதரிக்கின்றனர். எனக்கும் என் தந்தைக்கும் இடையே எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை.
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment