சவூதி: முஸ்லிம்களின் புனித இடமான மதீனாவிலுள்ள மசூதி அருகில் தங்கும் விடுதி ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் புனிதப் பயணம் மேற்கொண்டிருந்த பயணிகள் உட்பட 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மதீனா மசூதியின் அருகிலுள்ள இஷ்ராக் அல் மதீனா என்ற தங்கும் விடுதி. பலமாடிகள் கொண்ட இந்தத் தங்கும் விடுதியில் மதீனா மசூதிக்குப் புனிதப்பயணம் வந்திருந்த பயணிகள் சுமார் 700 க்கு மேற்பட்டோர் தங்கியிருந்தனர்.
வீடியோ
இந்நிலையில் நேற்று(சனிக்கிழமை) திடீரென இந்தத் தங்கும்விடுதியில் தீபிடித்தது. சம்பவம் அறிந்து உடனடியாக மதீனா தீயணைப்புப் படையினர் விடுதிக்கு வந்து சேர்ந்து தீயை அணைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். ஹெலிகாப்டர் மூலம் விடுதியில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணி நடந்தது.
எனினும் இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்ததாக மதீனா கவர்னர் அலுவலகம் தெரிவித்துள்ளது. சுமார் 130 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் புனிதப் பயணம் மேற்கொண்டிருந்த பயணிகள் என்றும் மதீனா கவர்னர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரணமடைந்த 15 பேரும் எகிப்து நாட்டைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவிபத்துக்கான காரணம் குறித்தும் விசாரணை ஆரம்பமாகியுள்ளது.
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment