கடையநல்லூர், ஜன.4–
கடையநல்லூர் அருகே உள்ள கரடிகுளத்தை சேர்ந்தவர் கருடமாடன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மாரியம்மாள் (வயது 28). இவரது செல்போனுக்கு மர்மநபர் ஒருவர் அடிக்கடி பேசி செக்ஸ் டார்ச்சர் செய்து வந்தார். இது குறித்து அவர் உறவினர்களிடம் தெரிவித்தார். உறவினர்கள் செல்போனில் பேசும் மர்மநபர் குறித்து விசாரணை நடத்தினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து மாரியம்மாள் கடையநல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரில் தனது செல்போனுக்கு மர்மநபர் ஒருவர் அடிக்கடி பேசி செக்ஸ் டார்ச்சர் செய்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து சப்–இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி விசாரணை நடத்தினார்.
விசாரணையில் புளியங்குடியை சேர்ந்த மசூது என்பவர் மாரியம்மாளின் செல்போனில் பேசி செக்ஸ் டார்ச்சர் செய்து வந்தது தெரியவந்தது. மசூது கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நிலைபாதிக்கப்பட்ட மாரியம்மாள் சிகிச்சை பெறுவதற்காக கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளார். அப்போது மாரியம்மாளின் செல்போன் நம்பரை தெரிந்து கொண்ட மசூது, அடிக்கடி செல்போனில் பேசி செக்ஸ் டார்ச்சர் செய்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி மசூதை தேடி வருகின்றனர்.
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment