
இதற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், 'நாட்டு மக்களின் அத்தியாவசிய பிரச்சனைகளை பற்றி யோசிக்காமல், அடுத்த பிரதமர் யார் என நாள் முழுவதும் பேசி எந்த பயனுமில்லை. இப்போது யார் அடுத்த பிரதமர் என்பது பிரச்சனை அல்ல.
அரசு, சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை ரூ.220 உயர்த்தி உள்ளது. இப்படிச் செய்தால் ஏழைகள் எப்படி வாழ முடியும்? இந்தப் பிரச்சனையை அவர்கள் (அரசியல் கட்சிகள்) கவனிப்பதில்லை.
நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்பது குறித்து நாள் முழுவதும் பேசி செலவிடுகிறார்கள்' குறிப்பிட்டார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், ஊழலுக்கு எதிரான போரை தொடர்ந்து நடத்துவோம். இந்த போரை நாடு முழுவதும் எடுத்துச்செல்வேன் என சொன்னது குறிப்பிடத்தக்கது.
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment