கடையநல்லூர் அண்ணாமலை நாதர் திருக்கோவிலுக்கு பாத்தியப்பட்ட திருமால் விழுங்கி “தெப்பக்குளம் இந்து சமய அறநிலையத் துறைக்கட்டுப்பாட்டில் இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட சமூகம் பராமரிக்கும் படியான நிபந்தனைகளுடன் தான் இன்று வரை பதிவேடுகளில் முடிவு செய்யப்பட்டுள்ளது.


ஒரு காலத்தில் பக்தர்கள் இங்கு குளித்துவிட்டுத் தான் கோவிலுக்கு சுவாமி கும்பிடச் செல்வது வழக்கம், சுத்தமாக பயன்பாட்டிலிருந்து இந்த பழங்கால தெப்பக்குளம் நாளடைவில் தனியார்களின் ஆக்கிரமிப்புகளாலும், நகரின் பிரதான கழிவுகள் இங்கு கொட்டப்படுவதாலும், சுத்தமான தெப்பத்து நீர் மாசுபட்டு, கழிவு நீர் சங்கமித்து ஒருவித துர்நாற்றமெடுத்து வருகிறது. குறிப்பாக அழுகிய பழவகைள் அனுதினமும் கொட்டி வருவதால் தெப்பக்குளம் முழுவதும் சாராய தொழிற்சாலை அமைந்துள்ளது போல் மிகுந்த நெடி வீசுகிறது.

குறிப்பாக தெப்பக்குளம் அமைந்துள்ள பகுதியின் அருகே பஸ்நிலையம், தியேட்டர், வங்கி ஏடிஎம், டாக்கிஸ்டாண்ட், பள்ளிக்கூடம், கோவில், குடியிருப்புகள், என பொதுமக்கள் அதிக நடமாட்டம் உள்ள இடங்கள் உள்ளன. இந்நிலையில் இப்பகுதிக்கு வரும் பொதுமக்கள் தெப்பத்தில் வீசும் துர்நாற்றத்தை தாங்க முடியாமல் வாந்தி எடுத்து வருகின்றனர்.

இது குறித்து சமூக சேவகர் கணபதி சுப்பிரமணியன், துர்நாற்றம் வீசும் இந்த தெப்பக்குளத்தை மட்டுமின்றி நகரில் பொதுமக்கள் பயன்பாட்டிலுள்ள அனைத்து தெப்பக்குளங்களையும் நகராட்சி நிர்வாகம் வருடத்திற்கு ஒரு தெப்பக்குளம் என்றளவில் தூர்வாரி, ஆக்ரமிப்பை அகற்றி பொது மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்க கூறி தமிழக முதல்வருக்கு புகார் மனு அனுப்பியுள்ளேன் என்றார்.


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment