நெல்லை, அக்.31–
நெல்லை மாவட்ட கலெக்டர் மு.கருணாகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மூலம் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நெல்லை மாவட்டத்தில் நடத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே கடந்த மாதம் 19-ந்தேதி ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
2வது முகாம் தென்காசி ஐ.சி.ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், வருகிற 7-ந்தேதி (சனிக்கிழமை) நடத்தப்பட இருக்கிறது.
முகாமில் 50-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்கள், ஐ.டி.ஐ., டிப்ளமோ முடித்தவர்கள் கலந்துகொள்ளலாம். 18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
தென்காசி, செங்கோட்டை, கீழப்பாவூர், ஆலங்குளம், கடையம் வட்டார ஊரக மற்றும் நகர்புற பகுதிகளைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் முகாமில் பங்கேற்கலாம்.
விருப்பம் உள்ள இளைஞர்கள் 7-ந்தேதி காலை 10 மணிக்கு தென்காசி ஐ.சி.ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விண்ணப்ப படிவத்தினை நேரடியாக பெற்று, தங்கள் விவரத்தினை பதிவு செய்து, வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்.
மேலும் அனைவரும் தங்களது கலவிச்சான்று மற்றும் ரேஷன் கார்டு அசல் மற்றும் நகல்கள் உள்ளிட்ட இதர சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment