தூணின்றி வான் அமைத்த தூயோனின் திருநாமத்தால் இண்டர்நேஷனல் முஸ்லிம் மீடியாவை தொடங்கினோம்,

இண்டர்நேஷனல் முஸ்லிம் மீடியா தொடங்கி மூன்று நாட்கள் கூட ஆகாத நிலையில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சொந்தங்களை வாசகர்களாக ஈர்த்து விட்டது. (அல்ஹம்துலில்லாஹ்...) 

இந்த அளவிற்கு நம்முடைய மீடியா வேகமாக வளர்வதற்கு உலகளாவிய அளவில் ஊடக பயங்கரவாதத்தை பற்றிய தாக்கத்தை நம் சகோதரர்களுக்கு அதிகமாக ஏற்பட்டுள்ளதை காட்டுகிறது.

நம்முடைய மீடியாவில் வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவின் மனிதநேய தன்மையையும், சகிப்புத்தன்மையையும் உலக நாடுகளுக்கு நெஞ்சை நிமிர்த்தி, சட்டை காலரை தூக்கி விட்டு சொல்வோம்....

அதேசமையம் இந்தியாவின் இறையாண்மையை கொச்சைப்படுத்தும் விதமாக இந்தியாவின் கேன்சராக இருக்கும் இந்துத்துவாவின் முகத்திரையை உலக அரங்கிற்கும், உலக நாடுகளுக்கும் கொண்டு சென்று இந்துத்துவாவின் முகத்திரையை கிழித்து எறிவோம்....

நம்முடைய மீடியாவில் இன்று அதிகமதிகம் தமிழக வாசகர்கள் இருக்கலாம்.

ஆனால் ஓர் நாள் விடியும், அந்த நாள் வெகுதொலைவில் இல்லை....

சவூதி அரேபிய முஸ்லிமையும், அமெரிக்க முஸ்லிமையும், ஆப்பிரிக்க முஸ்லிமையும், ரஷ்ய முஸ்லிமையும், ஐநாவில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளின் முஸ்லிமையும் இண்டர்நேஷனல் முஸ்லிம் மீடியா வென்றெடுக்கும்.

பாபர் மஸ்ஜித் இடிப்பு, குஜராத் இனப்படுகொலை உலக அரங்கிற்கு சென்றது போல் ஏனைய கலவரங்களும், இனப்படுகொலைகளும் வெளியுலகிற்கு செல்லாமல் இருந்தது.

வெளியுலகிற்கு செல்லாதவாறு இந்திய மீடியாக்கள் கணகச்சிதமாக நடந்து கொண்டார்கள்.

இப்பொழுது கூட பர்மா இனப்படுகொலை தொடர்பாக அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும் தொலைப்பேசி வாயிலாக தொடர்பு கொண்டு அவர்களுடைய கருத்தை முகநூல் முஸ்லிம் மீடியாவில் வெளியிடலாம் என்று....

முதல்வர் ஜெயலலிதாவை தொடர்பு கொண்டோம், அவருடைய பணியாளர் போனை எடுத்து இதுப்போன்ற விசயங்களுக்கு ஒ.பன்னீர் செல்வத்தை தொடர்பு கொள்ளுங்கள் என்றார், அவருடைய நம்பர் எங்களிடம் இல்லை, நீங்கள் கொடுங்கள் என்றோம், அவரும் கொடுத்தார், அந்த நம்பருக்கு இறுதிவரை போன் போகவேயில்லை,

ஜெயா தொலைக்காட்சிக்கு போன் செய்தோம், பர்மா இனப்படுகொலை தொடர்பாக இதுவரை ஏன் எந்த செய்தியும் வெளியிடவில்லை என்றோம்....

இப்படியொரு சம்பவமே எங்களுக்கு தெரியாது என்றார்கள்,

தேமுதிக தலைவர் விஜயகாந்தை தொடர்பு கொண்டோம், அவர் ஊரிலேயே இல்லை என்றார்கள்,

புதிய தலைமுறையை தொடர்பு கொண்டோம், பிறகு போடுவோம் என்றார்கள்,

தினமணியை தொடர்பு கொண்டோம், பிறகு போன் செய்யுங்கள் பிறகு விளக்கமாக சொல்கிறோம் என்றார்கள்,

திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து பிரமுகர்களையும் தொடர்பு கொள்ளும் முயற்சியும் மேற்கொண்டு வருகிறோம்.

இதை ஏன் இங்கே செல்கிறோம் என்றால் உலகின் எந்த மூலையில் யாரேனும் பாதிக்கப்பட்டாலும் உடனே தமிழகத்திலிருந்து பொங்கி எழும் அரசியல் கட்சிகளும், தமிழக ஊடகங்களும் பர்மா விவகராத்தில் அப்படியே மௌனம் காப்பதை காண முடிகிறது.

அரை நிர்வாணத்தோடு தொப்புளை காட்டும் நடிகைகளுக்கு முதல் பக்கத்தில் செய்தி வெளியிடும் ஊடகம், ஏனோ நம்முடைய குரல்களை மட்டும் வெளிப்படுத்துவதில்லை,

நாம் நசுக்கப்பட்டவர்கள், மிதிக்கப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், வஞ்சிக்கப்பட்டவர்கள் என்பதால் நம்முடைய குரல்களை யாரும் ஒலிப்பதில்லை.

யாராவது நமக்கு குரல் கொடுக்க மாட்டார்களா என்று நாம் ஏங்கி ஏங்கி நிற்பதற்கு பதிலாக நாமே நம்முடைய குரல்களை வெளியுலகிற்கு ஓங்கி ஒலிக்க செய்வோம்.

வஞ்சிக்கப்பட்ட சமுதாயத்திற்கு வாஞ்சையாகவும், ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்கு உரிமைக்குரலாகவும் ஓங்கி ஒலிக்கும் இன்ஷா அல்லாஹ்....

இண்டர்நேஷனல் முஸ்லிம் மீடியாவில் இணையாதவர்கள் இணைந்து கொள்ளுங்கள்....

https://www.facebook.com/pages/International-Muslim-Media/359874264211567


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment