செங்கோட்டையில் தேர்தலை சீர்குலைக்க சதி செய்ததாக 7 பேரை செங்கோட்டை போலீஸார் கைதுசெய்தனர்.

 தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் ஆங்காங்கே சோதனைச் சாவடிகள் அமைத்து வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் செங்கோட்டையில் தேர்தலை சீர்குலைக்கும் வகையில் நித்தியகல்யாணியம்மன் கோயில் பகுதியில் சிலர் தகராறில் ஈடுபட்டுள்ளதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

 இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸார் தூத்துத்குடியைச் சேர்ந்த மு.பரமசிவன்(27),கடையநல்லூர் காசிதர்மம் பகுதியைச் சேர்ந்த வெ.அப்ரானந்தம்(32), ஆ.சுடலைமுத்து(19),மு.ராமர்(26),செ.முருகன்(23),செ.முத்துபாண்டி(28), செங்கோட்டை கதிரவன் காலனியைச் சேர்ந்த ஆ.ரவிசங்கர்(28) ஆகியோரை கைதுசெய்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment