திருநெல்வேலி:கடையநல்லூர் அருகே போர்வெல் லாரி கவிழ்ந்து இன்று அதிகாலை 4.30 மணிக்கு சம்பவ இடத்திலே 2 பேர் பலியானார்கள்.7 பேர் காயமடைந்தனர். தென்காசியிலிருந்து சங்கரன்கோவிலுக்கு சென்று கொண்டிருந்த போர்வெல் லாரி கடையநல்லூர் அருகே கவிழ்ந்து பள்ளத்தில் விழுந்தது. லாரியின் பின்னால் இருந்த உ.பி.,மாநில ஊழியர்களான வினோத்(19)பரமேஸ்வர்(24) இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். மற்ற 7 பேர் காயமடைந்து தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த லாரி திருச்சங்கோட்டை சேர்ந்த முத்துவேல் என்பவருக்கு சொந்தமானது Tweet
Post a Comment