நெல்லை மாவட்டம் கடையநல்லூர் காவல்நிலையத்தில் கடந்த மூன்றாண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற இருக்கின்ற சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் அவர்களுக்கு நகர இந்து முன்னனி ,நகர பாரதிய ஜனதா மற்றும் பாரத் மாத குரூஸ் சார்பில் காவல்நிலையம் அருகில் மெயின் ரோட்டில் வாழ்த்தி டிஜிடல் பேனர் வைக்கப் பட்ள்ளது இந்த டிஜிடல் பேனரை பார்க்கின்ற ஒவ்வொருவரும் இவ்வளவு நாட்களாக இவர் காவல்துறையில் காவித்துறை சிந்தனையுடன் செயல்பட்டு இருக்கிறார் என்பது இப்போது தெரியவந்துள்ளது.

 ஆனால் நெல்லை மாவட்டத்தில் மாட்டநிர்வாகம் சார்பில் ஜாதி மத மோதல்களை தடுக்கின்ற விதத்தில் மாவட்டம் முழுவதும் வட்டாச்சியர் தலைமையில் சமாதானம் கூட்டம் போட்டு ஜாதி மத அடையாளங்களை பொது இடங்களில் எழுதக்கூடாது டிஜிடல் பேனர்களை வைக்க கூடாது என்றும் அதுபோல் அரசு அதிகாரிகள் சாதி மத அடையாளகளை காட்ட கூடாது என்று உத்தரவுயிட்ட நிலையில் கடையநல்லூரில் காவல் உயர் அதிகாரிக்கே இவ்வாறு பேனர் வைத்து இருப்பது கண்டனத்திற்குறியது என சமுகநல ஆர்வலர்கள் கூறுகிறார்கள் காவல் உயர்அதிகாரிகள் இந்த பேனரை அகற்றுவார்களா? பொருத்து இருந்து பார்ப்போம்! 



பேனரில் இடம் பெற்றுள்ள இந்து முன்னனி மாவட்ட. தலைவர் மாவடிக்கால் சிவா மீது கடையநல்லூர் காவல் நிலையத்தில் மதக்கலவரத்தை தூன்டியது உட்பட பல வழங்குகள் உள்ளது குறிப்பிடதக்கது. இதைதான் பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது என்பார்கள்.



-குறிச்சிசுலைமான்


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment