ஆய்க் குடி ஜெ.பீ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மகளிர் தின விழாவில் மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் ரஞ்சித்சிங் தலைமை வகித்தார். நிர்வாக பொறுப்பாளர் பிரான்சிஸ்கா துவக்கி வைத்தார். மெர்சி, பிரதீபா முன்னிலை வகித்தனர். 

நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட அனைத்து கல்லூரிகளுக் கான கல்வி இணை இயக்கு னர் பத்மலதா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பெண்களின் நிலை குறித்து பேசி மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். 

விழாவில் மாணவிகளின் மெகந்தி, நடனம், காய்கறி சித்திரம், பூக்கள் அலங்காரம், பாட்டுப்போட்டி, சிலம்பம் என 16 வகையான போட்டிகள் நடத்தப்பட் டன. இதில் 900 மாணவிகள் கலந்து கொண்டு தனது வாழ்வில் பெற்றோரை, தன் அருகில் வாழும் ஆதரவற்ற பெண்ணை மற்றும் பெண் ணின் தனித்துவத்தை வலியுறுத்தும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். 


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment