கடையநல்லூர் முப்புடாதி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கடையநல்லூர் தினசரி மார்க்கெட் அருகில் அமைந்துள்ள முப்புடாதி அம்மன் கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப் பட்டு நேற்று கும்பாபிஷே கம் நடந்தது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 30ம் தேதி காலை கணபதிஹோமம், அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, நவக்கிரக ஹோமம், முதல்கால யாகாசலை பூஜை நடந்தது. 31ம் தேதி காலை 2ம் கால யாகசாலை பூஜைகள், மாலையில் 3ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது.
1ம் தேதி காலை அஷ்டபந்தனமருந்து சாத்துதல், விக்னேஸ்வர பூஜை, நான்காம் கால யாகசாலை பூஜை, மாலையில் ஐந்தாம் கால யாகசாலை பூஜை, திரவ்யாகுதி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று 2ம் தேதி காலை விக்னேஸ்வர பூஜை, பிம்பசுத்தி, 6ம் கால யாகசாலை பூஜை, நாடிசந்தானம், ஸ்பர்சாகுதி நடந்தது. தொடர்ந்து கடம் எழுந்தருளல், காலை 9.35 மணிக்கு முப்புடாதி அம்மன் கோயில் ராஜகோபுரம், மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண் டனர். மதியம் அன்னதானம் நடந்தது. இரவில் அம்மன் வீதி உலா நடந்தது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர், திருப்பணிக்குழுவினர், அனைத்து சமுதாய மண்டகப்படிதாரர்கள் செய்திருந்தனர்.


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment