amma cement in kadayanallur
திருநெல்வேலி மாவட்டத்தில் திங்கள்கிழமை குறைந்த விலையிலான அம்மா சிமென்ட் விற்பனை தொடங்கப்பட்டது. 20 மையங்களில் விற்பனை செய்யப்படும் என ஆட்சியர் மு. கருணாகரன் தெரிவித்தார்.
நடுத்தர மற்றும் குறைந்த வருமானமுள்ள ஏழை எளியோர் பயன்பெறும் வகையில் ரூ. 190 க்கு சலுகை விலையில் அம்மா சிமென்ட் விற்பனை செய்யப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் திங்கள்கிழமை அம்மா சிமென்ட் விற்பனை தொடங்கப்பட்டது.
மானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் நடைபெற்ற விழாவில் விற்பனையைத் தொடங்கி வைத்து ஆட்சியர் மு. கருணாகரன் பேசியதாவது:
பயனாளிகள் புதிய வீடுகள் கட்டுவதற்கு 100 சதுர அடிக்கு 50 மூட்டைகள் வீதம் அதிகபட்சமாக 1,500 சதுரஅடி கொண்ட கட்டடத்திற்கு 750 மூட்டைகள் சிமென்ட் பெறலாம். வீடு பராமரிப்புப் பணிக்கு குறைந்த பட்சம் 10 முதல் அதிகபட்சமாக 100 மூட்டைகள் சிமென்ட் பெற்று பயனடையலாம்.
வீடு கட்டும் திட்டத்தின் வரைபடம் அல்லது கிராம நிர்வாக அலுவலர் அல்லது வருவாய் ஆய்வாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சியின் மேற்பார்வையாளர் அல்லது ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சாலை ஆய்வாளரின் சான்று, உறுதிமொழிக் கடிதம் அதாவது பயனாளிகள் பெறும் சிமென்ட் மூட்டைகள் முறையாக சொந்த உபயோகத்திற்கு மட்டும் பயன்படுத்தப்படும் என்பதற்கான உறுதிமொழி சான்று உள்ளிட்ட ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
சிமென்ட் பெறுவதற்கான உரிய தொகையை இந்தியன் வங்கிக் கிளைகளில் பஅஙஐகசஅஈம இஉஙஉசபந இஞதடஞதஅபஐஞச கஐஙஐபஉஈ, என்ற பெயரில் சென்னை கிளை மூலம் மாற்றும் வகையில் வரைவோலை மற்றும் வங்கி கணக்கு எண் 6276911017 இல் செலுத்தத்தக்க வகையில் இந்தியன் வங்கி கிளைகளில் பணமாகச் செலுத்தி ரசீது பெற்று அதை கிட்டங்கி பொறுப்பாளர்களிடம் சமர்ப்பித்து சிமென்ட் மூட்டைகளைப் பதிவு செய்து கொள்ளலாம்.
20 மையங்கள்: பயனாளிகளின் பதிவு மூப்பீடு எண் அடிப்படையில் மட்டுமே சிமென்ட் வழங்கப்படும்.
இம் மாவட்டத்தில் மானூர், மேலநீலிதநல்லூர், குருவிகுளம், சேரன்மகாதேவி, பாப்பாக்குடி, கடையம், களக்காடு, ராதாபுரம், கீழப்பாவூர், கடையநல்லூர், செங்கோட்டை ஆகிய ஊராட்சி ஒன்றியப் பகுதியில் உள்ள சிமென்ட் கிட்டங்கிகள் மற்றும் ஆலங்குளம், அம்பாசமுத்திரம், நான்குனேரி, பாளையங்கோட்டை, தென்காசி, திருநெல்வேலி, வள்ளியூர், வாசுதேவநல்லூர் மற்றும் சங்கரன்கோவில் ஆகிய 9 இடங்களில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிட்டங்களிலும் விற்பனை செய்யப்படும்.
அம்மா சிமென்ட் திட்டச் செயல்பாடுகள் குறித்து கட்டணமில்லா 1800 425 22000 என்ற தொலைபேசி எண்ணில் காலை 8 முதல் இரவு 10 மணி வரை தொடர்பு கொண்டு அறியலாம். திட்டம் தொடர்பான விவரங்களை ஜ்ஜ்ஜ்.ஹம்ம்ஹஸ்ரீங்ம்ங்ய்ற்.ஸ்ரீர்ம் என்ற இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
நிகழ்ச்சியில், சுத்தமல்லி ஊராட்சியைச் சேர்ந்த 5 பசுமை வீடு பயனாளிகளுக்கு தலா 20 மூட்டை சிமென்ட் வழங்கப்பட்டது.
இதில், மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் அ. விஜயகுமார், எம்.பி. க்கள் எஸ். முத்துக்கருப்பன், கே.ஆர்.பி. பிரபாகரன், எம்.எல்.ஏக்கள் நயினார் நாகேந்திரன், ச. முத்துச்செல்வி, மானூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் கல்லூர் இ. வேலாயுதம், துணைத் தலைவர் சிவா, ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் ரேணுகாதேவி, வட்டார வளர்ச்சி அலுவலர் என். உமாசங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்புக்கு:

 Community Hall, Sambavar Vadagarai,  Velayuthapuram. Pin:627856  Cell: 7402608501  Cement Company: India Cement 





உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment