கடையநல்லுரில் பள்ளி மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வினியோக 12வது முகாம்மை பள்ளியின் முதல்வர் தொடங்கி வைத்தார்.

கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பேட்டை கிளை சார்பில் நில வேம்பு கசாயம் தயார் செய்து கடையநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.




தற்போது மேற்கு தொடர்ச்சி மலை அருகில் அமைந்துள்ள நகரங்களான ராஜாபாளையம், சிவகிரி, வாசுதேவநல்லூர், புளியங்குடி கடையநல்லூர் ஆகிய ஊர்களில் டெங்கு மற்றும் விஷக் காய்ச்சல் பரவுவதை தடுக்கின்ற விதத்தில் வரும் முன் காப்போம் என்ற அடிப்படையில் கடந்த சில நாள்காளக கடையநல்லூரிர் நகர் பகுதிகளில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பொதுமக்களுக்கு நில வேம்பு கசாயம் தயார் செய்து வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.


இன்று காலை 10 மணியளவில் கடையநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நிலவேம்பு மூலிகைகளால் தயார் செய்யப்பட்ட மூலிகை சாரை மாணவிகளுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளை சார்பில் வழங்கபட்டது 12வது முகாமை பள்ளியின் தலைமை ஆசிரியர் பாக்கியரூபவதி அவர்கள் தலைமையேற்று தொடங்கி வைத்தார்கள். மற்றும் ஆசிரியர்கள் சுரேஷ், முருகேஷன், முத்துசாமி, முகம்மது இக்பால், சன்முகபாண்டி, முத்துலஷ்மி, சாந்தி கிருஸ்டேபர், வளர்மதி, செந்தாமரை செல்வி மற்றும் தீயணைப்பு மீட்பு அலுவலர் மில்டன் ஜெயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பேட்டை கிளை மகளிரணியை சார்ந்த சகோதரிகள் 2000 மாணவிகளுக்கு நில வேம்பு கசாயத்தை வினியோகித்தனர்

இதுவரை கடையநல்லூர் நகர் பகுதியில் நடத்தப்பட்ட 12 நிலவேம்பு கசாய முகாம்கள் மூலம் 30,000 க்கும் மேற்பட்ட பெதுமக்கள் பயனடைந்தனர். இந்நிகழ்ச்சியில் பேட்டை கிளை நிர்வாகிகள் அப்பாஸ், நிரஞ்சர் ஒலி, அப்துல் காதர், பிலால் சித்திக், முகம்மது சித்திக் மற்றும் மாநில பேச்சாளர் தாஹா மற்றும் பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.


இதற்கான ஏற்பாடுகளை பேட்டை மருத்துவரணி செயலாளர் உசைன் அவர்கள் சிறப்பாக செய்திருந்தார்.

நன்றி பேட்டை கிளை











உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment