தமிழக இந்து-சமய அறநிலையத் துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன் (64) நினைவிழந்த நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் தொகுதியைச் சேர்ந்த அமைச்சர் செந்தூர் பாண்டியனுக்கு திங்கள்கிழமை மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து இதயம் செயலிழந்த நிலைக்குத் தள்ளப்பட்டு அடையாறில் உள்ள ஃபோர்ட்டிஸ் மலர் மருத்துவமனையின் தீவிர இதய சிகிச்சைப் பிரிவில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார்.அவரது இதயத்தைச் செயல்பட வைக்கத் தேவையான "மசாஜ்' உள்ளிட்டவற்றை இதய மருத்துவ நிபுணர்கள் உடனடியாகச் செய்தனர். ஆஞ்சியோகிராம் பரிசோதனையும் செய்யப்பட்டது. எனினும் ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் இதய கரோனரி ரத்தக் குழாய்களில் அடைப்பில்லை என்பது தெரியவந்தது என டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அமைச்சர் செந்தூர் பாண்டியன் செவ்வாய்க்கிழமை காலை மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு செயற்கை சுவாசக்கருவி பொறுத்தப்பட்டுள்ளது. அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதா மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment