துபாய்: துபாயில் முக்கிய சாலைகளில்   பர்சை தவற விட்டால் அதனை எடுத்தவர்கள் நேர்மையாக திருப்பி தருகிறார்களா என்பதை இங்கிலாந்தை சேர்ந்த பட குழுவினர் கேண்டிட் கேமரா என்று சொல்லக்கூடிய, கேமரா இருப்பதே யாருக்கும் தெரியாத வகையில் கேமராவை பொருத்தி வீடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். அப்பதிவு துபாய் வாழ் மக்களின் நேர்மையை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளது. அதில் பர்ஸ் ஒன்றை ஒருவர் தவற விட்டால் துபாயில் எத்தனை பேர் நேர்மையாக எடுத்து திருப்பி தருகிறார்கள் என்பதை இந்த வீடியோ மூலம் தெரிய வந்துள்ளது.

அதில் சாலையில் நடந்து செல்லும்  இங்கிலாந்தை சேர்ந்த இளைஞர் துபாய் நகரின் பல வீதிகளிலும் தனது பர்ஸை தவற விட்டு விட்டு செல்வார் எங்கெல்லாம் அவர் தனது பர்ஸை தவற விட்டாரோ அங்கெல்லாம் அந்த பர்ஸை கண்டவர்கள் அல்லது எடுத்தவர்கள் அதனை தவறவிட்ட அந்த இளைஞரிடம்  திருப்பி ஒப்படைப்பதிலேயே அதிக ஆர்வம் செலுத்தினர்.

துபாயில் டிரேட் சென்டர் பகுதி, பர் துபாய், டவுன் டவுன் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 45 முறை பர்சை தவற விட்டு சோதனை செய்யப்பட்டு அத்தனை முறையும் அதனை எடுத்தவர்கள் திருப்பி அளித்தனர்.

இது குறித்து பர்சை தவற விடுவதாக நடித்த  டேனியல் ஜர்விஸ் கூறியதாவது, எடுத்த பொருளை நேர்மையாக திருப்பி தருவது என்பது அருமையான தருணமாகும். பர்சை எடுத்த அனைவரும் நேர்மையாக நடந்து கொண்டனர். அரபு நாடுகளில் உள்ள மக்களின் நேர்மையை எடுத்துகாட்டுவதாக இந்நிகழ்ச்சி அமைந்துள்ளது என்றார்.



உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment