கடையநல்லூர்: நெல்லை மாவட்டம் கடையநல்லுரில் டெங்குக் காய்ச்சல் பரவல் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் கருணாகரன் வீடு வீடாக சென்று ஆய்வு செய்தார். 

கடையநல்லூரில் கடந்த சில ஆண்டுக்கு முன்பு "மர்மக்காய்ச்சலுக்கு" (டெங்கு காய்ச்சலுக்குத்தான் இப்படிப் பெயர் சூட்டியுள்ளனர் அரசு அதிகாரிகள்) ஏராளமானோர் பலியாகினார்கள். இது போன்ற "மர்ம காய்ச்சல்" மீண்டும் பரவி விடக்கூடாது என்பதற்காக நெல்லை மாவட்ட ஆட்சி தலைவர் கருணாகரன் கடையநல்லுர் பகுதியில் ஆய்வில் ஈடுபட்டார்.



அங்குள்ள இக்பால் நகர் பகுதிக்கு சென்று வீடுகளில் உள்ள குடிநீர் தொட்டிகளில் டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாகிறதா என்பதை ஆய்வு செய்தார். இப்பகுதியில் உள்ள தேவையற்ற கழிவுகளை அகற்ற நகாராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார். 


அதன்பின்னர் அரசுமருத்துவமனைக்கு சென்ற மாவட்ட ஆட்சித்தலைவர் குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்தை வழங்கிவிட்டு உள்நோயாளிகளை பார்வையிட்டு காய்ச்சலுக்கு தேவையான அனைத்து மருந்து மாத்திரை களை தேவையான அளவிற்கு இருப்பு வைக்க டாக்டர்களுக்கு உத்தரவிட்டார் இறுதியில் நகராட்சி அலுவலகம் முன்பு பள்ளி மாணவர்களின் டெங்குகாய்ச்சல் குறித்த விழிப்புணர்வு பேரணியை தொடங்கிவைத்து டெங்கு விழிப்புணர்வு வாசகம் அடங்கிய நோட்டிஸையும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்தார்.

அவருடன் அதிகாரிகள்,அதிமுக பிரமுகர்கள் உடன் சென்றனர்.





உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment