உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற கண்டோன்மென்ட் தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் படுதோல்வி அடைந்துள்ளனர்.
நாடு முழுவதிலும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கண்டோன்மென்ட் பகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. இதில், உத்தர பிரதேச மாநிலத்தில் வாரணாசி மற்றும் லக்னோவில் நடைபெற்றது.
பிரதமர் மோடியின் பாராளுமன்றத் தொகுதியான வாரணாசியில் உள்ள கண்டோன்மென்ட் போர்டு தேர்தலில் முதல் முறையாக பாஜக போட்டியிட்டது. சில வார்டுகளில் அக்கட்சியின் ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
ஆனால் அவர்கள் அனைவரும் தோல்வியடைந்தனர். 7 வார்டுகளிலும் சுயேட்சை வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளனர்.
இதேபோல் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கின் லக்னோவில் தொகுதியான லக்னோவில் நடந்த கண்டோன்மென்ட் தேர்தலிலும் பா.ஜனதா 8 வார்டுகளிலும் தோல்வியடைந்தது. கட்சி சின்னத்துடன் போட்டியிடாததால் தோல்வி ஏற்பட்டதாக கட்சியின் மாநில தலைவர் கூறுகிறார்.
Courtesy : Webduniya
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment