சமீபத்தில் வித்தியாசமான முறையில் மேற்கொள்ளப் பட்ட ஆய்வொன்றில் தேங்க் யூ (Thank You) என்ற இரு பதங்கள் அடங்கிய வார்த்தையை எப்போதும் சொல்லத் தயங்காதீர்கள் என அறிவுறுத்தப் பட்டுள்ளது.
ஏனெனில் இது வெறுமனே நல்ல பழக்க வழக்கம் என்பதோடு மட்டுமல்லாது ஒவ்வொரு முறையும் சொல்லப் படும் போதும் பிறர் மீதான நமது உறவும் அன்பும் நன்கு மேம்பட்டு வரும் என்று கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
மேலும் உலக மக்களால் அதிகம் எழுதப்படும் இரு வாசகங்களாக 'I Love You!' மற்றும் 'Thanks' என்பவை விளங்குவதாகவும் குறித்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வட கரோலினா இலுள்ள பல்கலைக் கழகத்தின் உளவியல் வல்லுனரான சாரா அல்கோயே இன் கூற்றுப் படி 'நன்றி' என்ற வார்த்தை வெறுமனே நல்ல பழக்கம் என்பதைத் தாண்டிச் சென்று சமூக உறவுகளைக் கட்டி எழுப்பி அதன் தொடர்ச்சிக்கு உதவக் கூடியது என்பது ஆய்வில் ஊர்ஜிதப் படுத்தப் பட்ட விடயம் என்றும் கூறியுள்ளார். இது மட்டுமல்லாது நமக்கு முன் பின் தெரியாத புது நபர்களுடன் ஓர் நல்ல புதிய உறவை ஆரம்பித்து வைக்கும் கருவியாகவும் நன்றி சொல்வது செயற்படுகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.
சுருங்கச் சொன்னால் நன்றியுணர்வானது புதிய நட்புகளைத் தேடித் தர வல்லது (find), சமூக உறவுகளுக்கிடையே பாலமாக இருப்பது (remind) மற்றும் ஏற்கனவே உள்ள உறவை வலுப்படுத்துவது (bind) போன்ற விடயங்களுக்கு அடிப்படையாக இருக்கும் எனப் படுகின்றது. மேலும் நன்றியுணர்வை நேரடியாக அல்லாது வியக்கத் தக்க (Surprisingly) வகையில் நோட் போன்ற அல்லது மடல் போன்றவற்றில் எழுதி வெளிவிடுவது அறுந்து போன உறவுகளை இணைத்து வைக்கக் கூடிய வலிமையுடையதாக அது மாறி விடும் எனவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment