நாகூரில் இன்று இரவு மதக் கலவரம் ஏற்படுமோ என்ற பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக செய்தி வந்தது.

நேற்றைய தினம் ஆரிய சமுதாய நம்பிக்கைபடி இந்தியா முழுவதும் விநியாகர் சதுர்த்தி நடந்தது என்பது நீங்கள் அனைவரும் அறிந்த ஒன்றே.


அந்த கொண்டாட்டம் நேற்றோடு முடிவுற்று நிலையில் இன்று நாகூர் மீனவ சமூதாயத்தை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களுமாக மத குருக்கள் உட்பட நாகூர் தர்காவிற்கு சொந்தமான யானை ஒன்று அவர்களை வழிநடத்தி செல்ல.

மேலத்தாலத்தோடு இதுவரை எந்த வருடமும் இல்லாமல் (*பண்டக சாலை வழியாக சென்றுக் கொண்டிருந்த வழக்கத்துக்கு மாறாக) வேண்டும் என்றே பரிட்சயம் செய்து பாப்போம் என்ற எண்ணத்துடன் அடர்ந்த முஸ்லீம் சமுதாயம் வாழும் மீயான் தெரு எனும் தெருவில் உள்ள ஹிளுறு பள்ளி எனும் பள்ளிவாசல் வழியாக சரியாக மகரீப் தொழுகைக்கு பாங்கு சொல்லிக்கொண்டிருக்கும் சமயம் கடந்து செல்ல, அங்கிருந்த ஒரு சில முஸ்லீம் சமுதாயத்து இளைஞர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி உங்களுக்கு அனுமதி கொடுத்தது யார் என்று வினவ அதுசமயம் மீனவ சமுதாயத்தை சேர்ந்தவர்கள் இந்தியாவில் தற்போது எங்கள் ஆட்சி நடக்கிறது என்று கூற.... இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு இருந்திருக்கிறது.

இந்நிலையில் அங்கிருந்த இரு சமுதாயத்தை சேர்ந்த பெரியவர்கள் தலையிட்டு சமாதானம் செய்து அப்புறப்படுத்தி அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

இதனை அடுத்து வழக்கத்துக்கு மாறான விபரீதத்தை உருவாக்கும் இந்த ஊர்வலம் குறித்தும், இதனை பற்றி நாகூர் காவல் துரை மற்றும் உளவு துரையின் கவனமின்மையை சுட்டிக்காட்டும் வண்ணமும் காவல் துறையிடமே முஸ்லீம் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் புகார் மனு ஒன்றையும் கொடுத்து இருக்கிறார்கள்.

காவல் துரையின் கவனத்துக்கு கொண்டு சென்ற இந்த இடைப்பட்ட நேரத்தில் மீனவ சமுதாயத்தை சேர்ந்த ஒரு சிலர் வன்முறையில் ஈடுபடவேண்டும் என்ற சிந்தனையில் பள்ளி வாசலுக்கு அருகே வந்து, யாருடா அனுமதி இல்லை என்று தடுத்தது என்று கேட்க....

இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு, இரத்த காயங்கள் ஏற்பட்ட இந்த பரப்பரப்பான சூழ்நிலையில் நூகூர் முழுக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது.



மீனவ சமுதாயத்தினர் பலர் அந்த ஊர்வல ஏற்பாட்டாளர்களை அவ்வழியே போய் பிரச்சனை வளர்க்க வேண்டாம் என்று அறிவுறுத்தி இருந்திருந்தும், வேண்டுமென்றே பிரச்னைக்கு வித்திடும் விதமாக ஊர்வலத்தை திசைதிருப்பிவிட்ட நபர்களை சமூக விரோதிகளாக அடையாளம் கண்டு தமிழக காவல் துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் சமூக அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர்கெடுக்கும் விதமாக இத்தகைய வன்முறையை தூண்டும் விஷயத்துக்கு குறிப்பாக மிக எளிதில் உணர்ச்சிவசப்படும் இளைஞர்கள் இருக்கையில், எந்த அடிப்படையில் அனுமதி கொடுத்தார் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களும் தமிழக காவ‌ல் துறை தலைமையகத்தின் கவனத்துக்கு உட்பட்டு நாகூர் காவல் துறை ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பதாகவும் கேட்டுக்கொள்கிறோம்.

இது அனைத்தும் முன்கூட்டியே திட்டமிட்ட நிகழ்வாக இருக்க.... தமிழக உளவுத்துறைக்கு அறியாமல் போனது எப்படி? அப்படி இல்லையேல் ஒருகால் அறிந்து இருந்து, நடக்கட்டும் வேடிக்கை பார்க்கலாம் என்று அமைதி காத்து இருந்ததா?

இந்நிகழ்வை ஏதோ ஒரு ஊரில் எங்கோ ஒரு தெருவில் நடந்த சிறிய அசம்பாவிதம் என்று உதாசினப்படுத்தாமல் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க ஆவன செய்யுமாறு சகோதர பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

தகவல் -நாகூர் தீன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment