பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் மாநில முதல்-மந்திரியாக இருந்தபோது, அவர் மீது இடைநீக்கம் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இளம்பெண் ஒருவரை உளவு பார்க்க மோடி உத்தரவிட்டார் என்றும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் அவர் கூறி இருந்தார். 

ஆனால் அந்த பெண்ணின் தந்தை கேட்டுக் கொண்டதற்கிணங்க, அந்த பெண்ணின் பாதுகாப்புக்காக அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டதாகவும் அந்த பெண்ணை உளவு பார்க்க மோடி உத்தரவிடவில்லை என்றும் குஜராத் அரசு கூறியது. 

இந்த மனு மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது. நரேந்திர மோடி மீது குற்றம் சாட்டும் வகையில் எதுவும் இல்லை என்று கூறி வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு இந்த பிரச்சினையை பூதாகரமாக கிளப்பும் வகையில் நீதி விசாரணை குழு அமைக்க முயன்றது. ஆனால் தேர்தல் நெருங்கி விட்டதால் அவர்களின் அந்த முடிவு இறுதியில் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment