கொல்கத்தா: 28 வயதான ஸக்கீனா காத்தூன்
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடந்த
காமன்வெல்த் விளையாட்டுப்போட்டியில்
பளுதூக்கும்(61 கி.வரையிலான) பிரிவில்
கலந்துகொண்டபோது அவர் எடையை மட்டும்
சுமக்கவில்லை, தனது கிராமம் மற்றும்
குடும்பத்தின் நம்பிக்கைகளையும் உள்ளத்தில்
சுமந்திருந்தார்.இறுதியில் அவர் யாருக்கும்
ஏமாற்றம் அளிக்காமல் வெண்கல
பதக்கத்தை வென்றார்.
ஸக்கீனாவை உண்மையான சாம்பியன்
எனலாம்.ஏனெனில் பளுவுடன் மட்டும்
மல்லுக்கட்டவில்லை.தன்னை பாதித்திருந்த
போலியோவையும், வறுமையையும்
எதிர்த்துப் போராடித்தான் இந்த
பதக்கத்தை வென்றுள்ளார்.
மே.வங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து 80
கி.மீ தொலைவில் உள்ள வடக்கு 24 பர்கானாஸ்
மாவட்டத்தில் உள்ள கோரபாரா ஸக்கீனாவின்
சொந்த கிராமம்.அவரது தந்தை சிராஜுல்
காழி தினக்கூலியின் அடிப்படையில்
வேலைச்செய்தவர்.தற்போது வயதாகிவிட்டதால்
அவரால் வேலைக்குச் செல்ல
முடிவதில்லை..சகோதரர் நூர் இஸ்லாம் காழி,
உள்ளூரில் ஒரு தையல் கடையில் வேலைச்
செய்கிறார்.அவர் தான் குடும்பத்தின்
செலவுகளை கவனித்துக்கொள்கிறார்.தாயார்
நூர் ஜஹான் பேகம், உள்ளூரில் வீட்டு வேலைச்
செய்துவருகிறார்.ஸக்கீனாவுக்கு இன்னும்
திருமணம் ஆகவில்லை.அவரது சகோதரிகள்
சூஃபியா காத்தூன் மற்றும் ஜஹனரா காத்தூன்
ஆகியோருக்கு திருமணம் முடிந்துவிட்டது.
ஸக்கீனாவுக்கு போலியோ பாதிப்பு இருந்தபோதிலும்
சிறுவயதிலிருந்தே தடகளத்தில் ஆர்வம்
கொண்டிருந்தார்.மேலும் நீச்சல் மற்றும் இதர
விளையாட்டுக்களிலும் ஆர்வம்
கொண்டவர்.உள்ளூரில் உள்ள ஒரு க்ளப்பில்
நீச்சல் பயிற்சி பெற்றார்.சில போட்டிகளில்
சிறப்பு பிரிவில் கலந்துகொண்டுள்ளார்.
கரப்பாரா கால்பந்து பயிற்சி மையம்,
ஸக்கீனாவின்
ஆர்வத்தை கவனித்து அவரது இடது கால்
ஆபரேசனுக்கு உதவியது.இதன் மூலம்
சற்று பலம் பெற்றார் ஸக்கீனா.
டூசர்க்கிள் இணையத்திற்கு ஸக்கீனா அளித்த
பேட்டியில் கூறியது:’கரப்பா
ரா கால்பந்து பயிற்சி மையத்தின் நடுவர்
காளிதாஸ் மஜும்தார், சமூக ஆர்வலரும்,
வர்த்தகருமான திலிப் மஜும்தாரிடம் அழைத்துச்
சென்றார்.அவர் எனக்கு உதவ முன்வந்தார்.இதன
ைத்தொடர்ந்து கொல்கத்தாவில் உள்ள
கல்லூரி சதுக்க நீச்சல் க்ளப்பில் மஜூம்தான்
என்னை சேர்த்துவிட்டார்’ என்றார்.
அந்த கிளப்பில் உள்ள பயிற்சியாளர்கள்
ஸக்கீனாவுக்கு பளுதூக்குதலில்
திறமை இருப்பதை அறிந்து, அந்தப்போட்டியில்
கவனம் செலுத்த பரிந்துரைத்தனர்.ஆனால்,
அதற்கான வசதிகள் கொல்கத்தாவில்
இல்லை.இதனைத்தொடர்ந்து திலீப் மஜூம்தார்
மீண்டும் ஸக்கீனாவுக்கு உதவினார்.பஞ்சாப
ிலும் பின்னர் பெங்களூரிலும் அவர்
பளுதூக்கும் பயிற்சியில் ஈடுபட அவர்
உதவினார்.இவருக்கு பிரபல பளுதூக்கும் வீரர்
ஃபர்மான்
பாஷா வழிகாட்டுதலை வழங்கினார்.இவ்வ
ாண்டு துவக்கத்தில் துபாயில் நடந்த
பளுதூக்கும்போட்டியில்
ஸக்கீனா நான்காவது இடத்துக்கு வந்த பிறகும்
அவர் மனம் தளரவில்லை.காமன்வெல்த்
போட்டி துவங்குவதற்கு முன்னால்
அஹ்மதாபாத்தில் 3 மாத பயிற்சியில்
ஈடுபட்டார்.
காமன்வெல்த் போட்டியில் வெண்கலப்பதக்கம்
வென்ற ஸக்கீனாவை மே.வங்க
விளையாட்டுத்துறை அமைச்சர்
தமது அலுவலகத்தில் வைத்து தாயாருடன்
சந்திக்க அனுமதி வழங்கினார்.அரசு
அவருக்கு ஒரு லட்சம் ரூபாய்
பரிசுத்தொகை வழங்கியுள்ளது.மே.வங்க
முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திக்க ஏற்பாடுச்
செய்வதாக அமைச்சர் உறுதியளித்துள்ள
ார்.ஸக்கீனா தனது நிலைமையை ஸ்திரப்படுத்த
அரசு நிதியுதவி வழங்குவதுடன்
விளையாட்டு பிரிவின் கீழ்
சிறந்ததொரு வேலை வழங்கவேண்டும்
என்று எதிர்பார்க்கிறார்.அடுத்து ஆசிய
விளையாட்டுப்போட்டியில் பங்கேற்கும்
எண்ணத்துடன் பெங்களூருக்கு விரைவில்
பயிற்சிபெற ஸக்கீனா செல்லவிருப்பதாக
தெரிவித்தார்.தனக்கு கிடைத்த
வெற்றி இறைவன் அளித்த ஈத் பெருநாள்
பரிசு என்று ஸக்கீனா குறிப்பிட்டார்.
தனது ஸ்பான்ஸரான திலீப்
மஜூம்தாருக்கு மேலும் சிரமத்தை அளிக்க
ஸக்கீனா விரும்பவில்லை.ஆகையால், ஏதேனும்
அமைப்புகள் தனக்கு உதவ முன்வரவேண்டும்
என்று நம்புகிறார்.
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment