அன்பார்ந்த கடையநல்லூர் வாசிகளுக்கு !

முஸ்லிமான அடிமை, சுதந்திரமானவர், ஆண், பெண், பெரியவர் மற்றும் சிறுவர் மீது நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு கோதுமை, அல்லது ஒரு ஸாவு பேரீச்சையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) , நூல்: புகாரி 1503


நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான காரியங்களை விட்டும் நோன் பாளியைத் தூய்மைப்படுத்தவும், ஏழை களுக்கு உணவாகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபித்ரா தர்மத்தை விதியாக்கினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : அபூதாவூத் 1371, இப்னுமாஜா 1817

    பொதுமக்களிடம் வசூலிக்கும் பித்ரா (நோன்பு பெருநாள் தர்மம்) தொகையை உணவு பொருளாக கடையநல்லூர் மற்றும் அதன் சுற்று புறங்களில் வாழும் தகுதியான  முஸ்லிம் ஏழைகளுக்கு பல ஆண்டுகளாக  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வழங்கி வருகிறது.  

    உங்கள் பித்ரா முறையான வழியில் ஏழைகளுக்கு சென்றடைய கடையநல்லூரில் செயல்படும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளைகளிடம் கொடுக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறது.


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment