செங்கோட்டை: செங்கோட்டை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் மரம் பழமையான மரம் விழுந்து 4 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.</p><p>செங்கோட்டை வட்டரப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது.மேலும் சிறு..சிறு..சாரல் மழையும் தூவி வருகிறது. தொடர்ந்து வீசிவரும் சூறைக்கற்று காரணமாக தென்னை,வாழைமரங்கள் சேதம் அடைந்துள்ளன.

ராட்சத ஆலமரம்

இந்த நிலையில் இன்று காலை 6.30 மணியளவில் செங்கோட்டை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் பீ.வீ.டி.மில் அருகே பழமை வாய்ந்த இராட்சத ஆலமரம் ஓன்று ரோட்டின் குறுக்கே விழுந்தது. இதில் 5 மின் கம்பங்களும் சேதமடைந்தன.4 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


போக்குவரத்து பத்திப்பு

காலைநேரம் என்பதால் கேரளாவிலிருந்து தமிழகம் வரும் பயணிகள்,பள்ளி மாணவ,மாணவிகள்,பேருந்துக்கள்,பெரும் சிரமத்தை சந்தித்தனர். மேலும் தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் சரக்கு வாகனங்கள் நீண்ட நேரம் சாலைகளில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.



நீண்ட போராட்டம்

இது குறித்து தகவல் அறிந்த புளியரை போலீசார் ,நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், மின் வாரியத்தினர் உள்ளிட்டோர் கிரேன்கள் கொண்டுவந்து நீண்ட நேர போராட்டத்திற்குப் பின் சாலையின் குறுக்கே விழுந்த ஆலமரத்தை அகற்றினர்.



அணிவகுத்த வாகனங்கள்

சாலையின் குறுக்கே மரம் விழுந்த காரணத்தால் சாலையின் இருபுறங்களிலும் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.


போக்குவரத்து பாதிப்பு

4 மணிநேரம் வரை போக்குவரத்து தடைபட்டதால் பள்ளி,கல்லுரி,அலுவலகங்களுக்கு செல்வோர் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment