நம் இந்தியா ஏன் முன்னேறவில்லை? முன்னேற முடியாமல் ஏன் தடுமாறுகிறது?? விடை நிச்சயம் வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு தெரிந்து இருக்கும்,உண்மைத்தான் சகோதரர்களே..
அமெரிகாக்கவின் டாலருக்கு நிகரான இந்தியாவின் மதிப்பு 64 ரூபாய், ஏன் இந்த பணவீக்கம் ?? சகோதர்களே நான் ஒரு சில கருத்துக்களை உங்கள் முன் வைக்க விழைகின்றேன்,,
காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை உள்ள ஒவ்வொரு இந்தியனும் ஏமாந்து கொண்டிருக்கிறான், made in india என்று பொறிக்கப்பட்டுள்ள எந்த ஒரு பொருளையும் நாம் வாங்க நாம் தயங்குகிறோம் ,,ஆனால் வெளிநாடுகளில் made in india என்றால் போட்டி போட்டுகொண்டு வாங்குகிறார்கள்,,
காரணம் நமக்கு இரண்டாம் ரகம் பொருட்களை நமக்கு தந்துவிட்டு மேலை நாடுகளுக்கு முதல் ரக பொருட்களை ஏற்றுமதி செய்கிறது, வெளிநாடுகளில் வாழும் மாற்று மொழியனருக்கும் நம் இந்தியாவை சொல்லமுடியாத அளவுக்கு புகழ்கிறார்கள் ,,ஆனால் உள்நாட்டில் இருக்கும் நமக்கு ஏமாற்றமே மிச்சம்,
நம் நாட்டில் ஒருவனுக்கு வேலை கிடைப்பது சாதாரண விஷயம் இல்லை,,எந்த துறையாக இருக்கட்டும், வேலை கிடைத்தாலும் அவன் சம்பளம் 6000 ரூபாய் 7000 ரூபாய்,,ஆனால் வெளிநாட்டில் வேலை குப்பை அள்ள செல்பவருக்கும் கிடைக்கும் சம்பளம் குறைந்த பட்சம் 30000 ரூபாய், காரணம் இங்கு அதிகநேரப்பணி உண்டு ,,ஆனால் இந்தியாவில் எங்கும் கொடுப்பது இல்லை, நம் இரத்தத்தை உறிஞ்சுவிட்டு நமக்கு தருவது ஏமாற்றம்,,
இந்த வெளிநாடுகளில் இந்தியன் என்று சொன்னால் சாதாரண விஷயம் இல்லை நண்பர்களே,,எழுந்து நின்று கை கொடுப்பான்,,ஏன் என்றால் நம் நாட்டின் மீது நம்மவர்களைவிட அவர்கள் அதிகம் மதிப்பு வைத்து உள்ளார்கள்,ஏமாற்ற மாட்டார்கள் என்ற நம்பிக்கை அவர்களுக்கு உண்டு,,ஆனால் நம் நாட்டின் உள்ளேயே நாம் ஏமாந்து கொண்டிருகின்றோம்,
ஒரு உதாரணம் நண்பர்களே- நாம் அனைவரும் சீனா மொபைல் ஒன்று வாங்குகிறோம்,,விலை மலிவென்று,,அதே மொபைல்தான் வெளிநாட்டவரும் வாங்குகின்றார்கள்,,வெட்கமான விஷயம்,,நாம் வாங்குவது 3 வது ரக தொலைபேசிகள், இதற்க்கு நாம் யார் மேல் கோபப்பட முடியும்,நிச்சயம் நம் அரசாங்கம் தான் இதற்கு உத்துழைப்பும் அதிகாரமும் தருகிறது,
உலக வங்கி கடன் ஊர் ஏமாற்றும் வேலை,,நீ தரமான பொருளை ஏற்றுமதி செய்துவிட்டு மட்டமான பொருட்களை எங்களுக்கு ஏன் தருகிறாய்,முதலில் உன் நாட்டை கவனித்து விட்டு பின் அண்டை நாடை கவனி,வருமானம் ஈற்றிகொள்..
வெளிநாடுகளில் ஒரு முட்டையில் ஓட்டின் மேல் முட்டைக்கான கால தேதி எப்பொழுது முடிவடையும் என்று பொரிக்க பட்டுள்ளது ,,ஆனால் நம் அரசு தரும் மருந்துகளில் கலப்படம் உயிரிழப்பு நடக்கிறது.ஏழை மக்கள் எங்கு செல்வர்..
அடுத்து கல்வி.. வீதிக்கு நான்கு பொறியியல் கல்லூரிகள்,அதை கட்ட அரசுக்கு லட்ச கணக்கில் பணம் கட்டியாக வேண்டும்,அடுத்து ஏழை எளிய மக்களளின் வயற்றில் அடித்து முடிந்த வரை சேர்கை கட்டணம் வசூலிக்க வேண்டும் ,,ஏழை மக்கள் வங்கியின் உதவியை நாடி செல்ல வேண்டும்,,அங்கு கல்விகடன் கொடுப்பார், அதற்கும் வட்டி ,,ஏன் என்றால் அதும் அரசாங்கம் தானே நடத்துகிறது,,இது ஒரு சுழற்சி முறை திருட்டு என்பது மக்களுக்கு தெரியவில்லை,,
அடுத்து விளம்பரம் ,,ஒரு நடிகையை வைத்து இந்த சோப்பை பயன்ப்படுத்துங்கள் என்பார்,,அதே நடிகை வேறு ஒரு விளம்பரத்தில் பங்கு பெற்று இந்த சோப்பையும் பயன்ப்படுத்துங்கள் என்பார்,,நடிகை சொன்னால் வேதவாக்கு அல்லவா ?? அவர்களுக்கு அது வருமானம்,,10 ரூபாய் சோப்பு விளம்பரத்துக்கு அவர்களுக்கு 10 கோடி ,,உனக்கு தெருகோடி..யோசித்து பாருங்கள்,,யாரோ உழைப்பதற்கு ஏன் நம் உழைப்பின் பணம் கட்ட வேண்டும் ,,
ஒரு குளிர்பானத்தின் உண்மை விலை என்ன தெரியுமா ? வெறும் 50 பைசா ..உங்கள் கையில் அது சேரும் போது 15 ரூபாய்,.14.50 பைசா எங்கே போகிறது,,இந்தியாவின் சட்டம் இதுதான், உள்நாட்டில் கொள்ளை அடி,,வெளிந்நாட்டில் கைகட்டி நில்,
நேற்று ஒரு நாளிழதில் ஒரு செய்தி..40 கிலோ மீட்டர் பிரசவ மனைவியை சுமந்து வந்த மலை வாழ் கணவன்..தாமதமானதால் குழந்தை இறந்து பிறந்தது என்று,,கேலிகூத்து,,ஒரு அடிப்படை வசதி செய்து தரமுடியாமல் ஒரு குழந்தை இறந்துள்ளது..ஆனால் அந்த செய்தி சிறு மூலையில்,,அமைச்சர் வருகை ஒரு பக்க செய்தி,, எதர் எதற்கோ போராட்டம் நடத்தும் நாம் அந்த மழை வாழ் மக்களின் நிலைகாக ஒரு போராட்டம் நடத்திருப்போமா??
சுவிசில் பலகோடி பதுக்கல் பணம், அதில் ஒரு பத்தாயிரம் அவனுக்கு கிடைத்திருந்தால் குழந்தை உயிர் பெற்றிருக்கும் ,,ஒவ்வொரு சாவுக்கும் என் தாய் நாடு தான் காரணம்,,இங்கு நடப்பது வேறு அல்லவா,
நாமும் முட்டாள்தானே,,புயல் தமிழகத்தில் தாக்க வருகிறது..பயம் பதட்டம்,,புயல் திசை திரும்புகிறது ,,ஆந்திராவை நோக்கி பயணம்,,நமக்கு நிம்மதி பெருமூச்சு,,பிழைத்தோம் என்று,,ஏன் ஆந்திராவில் உள்ளவர்கள் உன் உடன் பிறப்பு இல்லையா ?? உனக்கு வந்தால் உயிர் வலி,,அவனுக்கு வந்தால் நாம் பிழைத்தோம்,,என்ன ஒரு சுயநலம் நமக்கு??
இந்தியாவில் நடக்கும் ஒவ்வொரு பட்டினி சாவுக்கும் நாம்தான் காரணம்,,யாரும் தவறு செய்யவில்லையா? என்று கேட்காதே? நீ செய்யாமல் இருக்க முயற்சி செய்,,
அது நம் இந்தியா இளைநர்கள் நினைத்தால் மட்டுமே சாத்தியம்
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Post a Comment